பிரதமர் மோடி கொண்டு வந்த நல்ல திட்டங்களை புறக்கணிக்க பத்திரிகையாளர்கள் முடிவு செய்தோம் : மனம் திறந்த ஷேகர் குப்தா

பிரதமர் மோடி கொண்டு வந்த நல்ல திட்டங்களை புறக்கணிக்க பத்திரிகையாளர்கள் முடிவு செய்தோம் : மனம் திறந்த ஷேகர் குப்தா

Update: 2019-05-31 20:22 GMT

கடந்த பாராளுமன்ற தேர்தலில் நாடு முழுவதும் மோடி சுனாமி வீசி, தனி பெரும்பான்மையுடன் பா.ஜ.க மத்தியில் ஆட்சி அமைந்துள்ளது. தமிழர்கள் நிர்மலா சீதாராமன் மற்றும் ஜெய்கணேஷ் ஆகியவர்களுக்கு முக்கிய கேபினட் அமைச்சர் பதவி கிடைத்துள்ளது.


ஆனால் தமிழகத்தில் கடந்த 4 ஆண்டுகளில் பிரதமர் மோடி மீதும் பா.ஜ.க மீதும் வெறுப்பு பிரச்சாரத்தை தமிழக ஊடகங்கள் கையிலெடுத்தன. இதற்கு உறுதுணையாக சமூக வலைதள பக்கங்கள் பலவும் செயல்பட்டன. ஆனால், பிற மாநிலங்களில் இந்த அளவுக்கு வெறுப்பு பிரச்சாரம் இல்லை என்றாலும், பிரதமர் மோடியின் நல்ல திட்டங்களை கொண்டு சென்று சேர்ப்பதில் அங்கும் ஊடகங்கள் தவறி விட்டன. அனைவருக்கும் வீடு, தூய்மை இந்தியா திட்டம் மூலம் கழிப்பறை, முத்ரா கடன், இலவச சமையல் எரிவாயு போன்ற எண்ணற்ற திட்டங்கள் ஏழை எளிய மக்களை நேரடியாக சென்று அடைந்ததால், நாடு முழுவதும் பா.ஜ.க-விற்கு மக்கள் பெரிய அளவில் வாக்களித்துள்ளனர்.




https://twitter.com/OpIndia_com/status/1134531238063235073?s=19


இந்த நிலையில், எடிட்டர்ஸ் கில்டின் தலைவரும், தி பிரிண்ட் என்ற இணையதள செய்தியை நடத்துபவருமான புகழ் பெற்ற பத்திரிகையாளர் மற்றும் ஆசிரியரான ஷேகர் குப்தா மோடியின் வெற்றி குறித்து பேசியுள்ளார். கடந்து ஐந்து ஆண்டுகளாக பிரதமர் மோடியின் மீது வெறுப்பு பிரச்சாரம் செய்த இவர், தற்போது உண்மையை மனம் திறந்து பேசியுள்ளார். "மோடியின் நல்ல திட்டங்களை பத்திரிகையாளர்களான நாம் புறக்கணித்தோம்", என்று கூறியுள்ளார். அதன் முழு காணொளியை கீழே காணலாம்.




https://youtu.be/mL5quXQzLkY



Similar News