மத்திய அரசு வெளியிட்ட அதிர்ச்சி தகவல் : 2019 முதல் 2021 ஆம் ஆண்டு வரை மாயமான லட்சக்கணக்கான பெண்கள்
2019 முதல் 2021 ஆம் ஆண்டு வரை 13 லட்சம் பெண்கள் மாயமாகி உள்ளதாக மத்திய அரசு அதிர்ச்சி தகவல் வெளியிட்டுள்ளது.
தேசிய குற்ற ஆவண காப்பகம் அளித்த தகவல்கள் அடிப்படையில் மத்திய உள்துறை அமைச்சகம் தொகுத்த புள்ளி விவரங்கள் கடந்த வாரம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன. அதன்படி 2019 - ஆம் ஆண்டு முதல் 2021 ஆம் ஆண்டு வரையிலான மூன்று ஆண்டுகளில் நாடு முழுவதும் 13 லட்சத்து 13 ஆயிரம் பெண்களும் சிறுமிகளும் காணாமல் போய் உள்ளனர் .
இவர்களில் 18 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் 10 லட்சத்து 61,648 பேர் ஆவர். 18 வயதுக்கு உட்பட்ட சிறுமிகள் 2 லட்சத்து 51,430 பேர் ஆவர் . அதிகமான பெண்கள் காணாமல் போன வகையில் மத்திய பிரதேசம் முதலிடம் வகிக்கிறது. அங்கு ஒரு லட்சத்து 60 ஆயிரத்து 180 பெண்களும் 38,234 சிறுமிகளும் காணாமல் போய் உள்ளனர். இரண்டாவது இடத்தில் மேற்கு வங்காளமும், மூன்றாவது இடத்தில் மராட்டியம் மாநிலமும் அடுத்தடுத்த இடங்களில் ஒடிசா , சத்தீஸ்கர் மாநிலங்களும் இருக்கின்றன.
SOURCE :DAILY THANTHI