'ஜட்ஜம்மா என்னை மன்னிச்சுடுங்க இனிமே இப்படி அசிங்கமா பேசமாட்டேன்' - நீதிபதியிடம் சாஷ்டாங்க மன்னிப்பு கேட்ட தி.மு.க ஆபாச பேச்சு சைதை சாதிக்!

பொதுக் கூட்டத்தில் அவதூறாக பேசியதால் நடிகைகளிடம் தி.மு.க நிர்வாகி மன்னிப்பு கேட்டார்.முன் ஜாமீன் வழங்கி ஐகோர்ட் உத்தரவு.

Update: 2022-11-30 14:15 GMT

சென்னையில் கடந்த அக்டோபர் மாதம் 26 ஆம் தேதி தி.மு.க பொதுக்கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் தி.மு.க நிர்வாகி சைதை சாதிக் பேசும்போது பா.ஜ.க.வை சேர்ந்த நடிகைகள் குஷ்பூ, நமீதா, கௌதமி, காயத்ரி ரகுராம் குறித்து அவதூறான கருத்துக்களை தெரிவித்தார். இதுகுறித்து கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் சைதை சாதிக் மீது பல்வேறு சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் முன்ஜாமீன் கேட்டு சென்னை ஐகோர்டில் அவர் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஏ.டி ஜெகதீஷ் சந்திரா இனிமேல் இதுபோல அவதூறாக பேச மாட்டேன் என்றும் நடிகைகளிடம் மன்னிப்பு கேட்டும் பிரமாண மனு தாக்கல் செய்ய சைதை சாதிக்கிற்கு கடந்த வாரம் உத்தரவிட்டார்.


இந்த முன் ஜாமின் மனு நீதிபதி முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நடிகைகளிடம் மன்னிப்பு கேட்டும் இனி இதுபோல பேச மாட்டேன் என்று உறுதியளித்தும் பிரமாண மனு சைதை சாதிக் தரப்பில் தாக்கல் செய்யப்பட்டது .இதை பதிவு செய்து கொண்ட நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா மனுதாரருக்கு நிபந்தனை அடிப்படையில் முன் ஜாமின் வழங்கினார். ஒரு வாரத்துக்கு விசாரணை அதிகாரி முன்பு ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.





 


Similar News