சூரிய மற்றும் சந்திர கிரகணம் - திருமலை ஏழுமலையான் கோவில் நடை சாத்தப்படும் நேரங்கள் எவை தெரியுமா?

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வரும் சூரிய கிரகணத்தால் 12 மணி நேரம் நடை சாத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2022-10-13 05:10 GMT

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வரும் சூரிய கிரகணத்தால் 12 மணி நேரம் நடை சாத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வரும் அக்டோபர் 25ஆம் தேதி சூரிய கிரகணம், நவம்பர் 8'ம் தேதி சந்திர கிரகணத்தை முன்னிட்டு ஏழுமலையான் கோவில் 12 மணி நேரம் நடை சாத்தப்பட்ட உள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. இது குறித்து தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிக்கையில் திருமலையில் கிரகண காலங்களில் கோவில் நடை சாற்றப்படுவது வழக்கம் இந்நிலையில் வரும் அக்டோபர் 25ஆம் தேதி சூரிய கிரகணமும் நவம்பர் 8'ம் தேதி சந்திர கிரகணம் வருவதால் ஏழுமலையான் கோவில் இந்த நாட்களில் 12 மணி நேரம் நடை சாத்தப்படும் என அறிவித்துள்ளது தேவஸ்தானம்.

அக்டோபர் 25ஆம் தேதி சூரிய கிரகணம் அன்று ஏழுமலையான் கோவில் காலை 8:11 மணி முதல் இரவு 7:30 மணிவரை நடை சாத்தப்படும் என்றும் வளாகத்தை சுற்றி சடங்குகள் செய்த பின் மீண்டும் கோவில் கதவுகள் திறக்கப்படும் எனவும், நவம்பர் எட்டாம் தேதி 2:39 மணி முதல் மாலை 6:19 மணி வரை சந்திர கிரகணம் நிகழ உள்ளது இந்நாளில் கோவில் காலை 8:40 மணிக்கு மூடப்பட்டு இரவு 7:20 மணிக்கு மீண்டும் திறக்கப்படும் எனவும் தேவஸ்தானம் நேரத்தை அறிவித்துள்ளது.

இந்த இரண்டு நாட்களில் வி.ஐ.பி பிரேக் தரிசனம், 300 ரூபாய் ரூபாய் விரைவு தரிசனம், கல்யாண உற்சவம், ஊஞ்சல் அலங்கார சேவை, ஆர்ஜித பிரம்மோற்சவம் மற்றும் சகஸ்ர தீப அலங்கார சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன எனவும் திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

Similar News