வீடுகளில் சூரிய மின் உற்பத்தி- இதுவரை ஒரு கோடி குடும்பங்கள் பதிவு!

வீட்டின் மேற்கூரைகளில் சூரிய மின் உற்பத்தி செய்யும் திட்டம் தொடங்கப்பட்டு ஒரு மாதமே ஆகும் நிலையில் இதுவரை ஒரு கோடிக்கும் மேற்பட்ட குடும்பங்கள் பதிவு செய்துள்ளன.

Update: 2024-03-17 12:29 GMT

இதுவரை ஒரு கோடிக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வீடுகளில் சூரிய மின்  உற்பத்தி செய்யும் திட்டத்திற்கு பதிவு செய்துள்ளதால் பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட எக்ஸ்தள பதிவில் கூறியிருப்பதாவது :-

பிரதமரின் சூரிய இல்லம் இலவச மின்சார திட்டம் தொடங்கப்பட்டு சுமார் ஒரு மாத காலத்தில் நாடு முழுவதும் இருந்து பதிவுகள் குவிந்து வருகின்றன. இதுவரை ஒரு கோடிக்கும் மேற்பட்ட குடும்பங்கள் பதிவு செய்துள்ளன. குறிப்பாக தமிழகம் ,உத்தர பிரதேசம், மகாராஷ்டிரம் ,குஜராத், ஒடிசா, பீஹார் மாநிலங்களில் பல ஐந்து லட்சத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் பதிவு செய்தனர். இதுவரை பதிவு செய்யாதவர்கள் விரைந்து பதிவு செய்ய வேண்டும் என்று பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார். நாடு முழுவதும் ஒரு கோடி வீடுகளின் மேற்கூறையில் சூரிய மின் உற்பத்தி தகடுகளை பொருத்தி அதன் மூலம் குடும்பங்களுக்கு மாதம் 300 யூனிட் வரை இலவசமாக மின்சாரம் கிடைக்கச் செய்வதற்காக பிரதமரின் சூரிய எல்லம் இலவச மின்சார திட்டத்தை பிரதமர் மோடி கடந்த பிப்ரவரி 13-ஆம் தேதி தொடங்கி வைத்தார் .

ரூபாய் 75 ஆயிரத்து 21 கோடி மதிப்பீட்டில் இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதன் படி வீட்டின் மேற்குறையில் இரண்டு கிலோ வாட் வரை மின் உற்பத்தி திறன் கொண்ட சூரிய சக்தி அமைப்பை நிறுவுவோர்க்கு 60 சதவீத மானியமும் இரண்டு முதல் மூன்று கிலோவாட்டு சூரிய சக்தி அமைப்பை நிறுவுவோருக்கு கூடுதலாக 40% மானியமும் வழங்கப்படும். தற்போதைய தரநிலை விலை அடிப்படையில் ஒரு கிலோ வாட் அமைப்புக்கு 30,000 ,2 கிலோ அமைப்புக்கு 60 ஆயிரம், 3 கிலோ அல்லது அதற்கு மேற்பட்ட கிலோ வாட் அமைப்புக்கு 78,000 மானியம் கிடைக்கும்.

சூரிய இல்லம் திட்டத்தில் சேர விரும்புவோர் www.pmsuryaghar.gov.in என்ற தேசிய வலைத்தளம் மூலம் விண்ணப்பித்த சூரிய மின் தகடுகளை நிறுவ பொருத்தமான விற்பனையாளரை தேர்வு செய்து கொள்ளலாம். இத்திட்டத்தின் கீழ் சூரிய மின் தகடுகளை பொருத்த குறைந்த வட்டியில் பிணையில்லா கடன் வசதியும் உள்ளது .மூன்று கிலோவாட் திறன் கொண்ட சூர்ய சக்தி அமைப்பை நிறுவுவதன் மூலம் மாதத்திற்கு சராசரியாக 300 யூனிட்டுகளுக்கு மேல் மின்னு உற்பத்தி செய்ய முடியும். இதன் மூலம் மின் கட்டணத்தை மிச்சப்படுத்துவதோடு கூடுதல் மின்சாரத்தை விற்பனை செய்து வருவாயும் ஈட்டலாம என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது .

சூரிய இல்லம் திட்டத்தால் 25 ஆண்டுகளில் 720 மில்லியன் கார்பன் டை ஆக்சைடு உமிழ்வு குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இத்திட்டத்தின் வாயிலாக உற்பத்தி சரக்கு கையாளுகை, விநியோகச் சங்கிலி , சூரிய தகடுகளை நிறுவுதல் என பல்வேறு பணிகளில் சுமார் 17 லட்சம் பேர் நேரடியாக வேலை வாய்ப்பு பெறுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


SOURCE :Dinamani

Similar News