முகக்கவசம் அணிவதில் முன்னுதாரணமாக திகழும் தமிழக அமைச்சர் S.P. வேலுமணி..!

முகக்கவசம் அணிவதில் முன்னுதாரணமாக திகழும் தமிழக அமைச்சர் S.P. வேலுமணி..!

Update: 2020-06-21 14:05 GMT

கொரோனா தொற்று நோயின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், தமிழக உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதில் அதிக அக்கறை காட்டி வருகிறார்.

மக்களுக்கு இந்த பேரிடரில் செய்ய வேண்டிய உதவிகளை களத்தில் செய்து வரும் அமைச்சர், கொரோனா வைரஸ் கிருமி பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணியை கடந்த மார்ச் மாதம் முதல் தமது சமூக ஊடகங்களில் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி செய்து வருகிறார்.

அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் ட்விட்டர், ஃபேஸ்புக், இண்ஸ்டாகிராம், ஹலோ, இணைய தளம் பக்கம் முழுவதும் கொரோனா விழிப்புணர்வு பதாகைகளும், வீடியோக்களும் காணப்படுகின்றன.

கொரோனாவிற்கு உலக அளவில் தடுப்பு மருந்து இன்னமும் கண்டுபிடிக்கப்படாத நிலையில், முகக்கவசம், சமூக விலகல், நவீன/பாரம்பரிய முறையில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்தல், கைகளை கழுவுதல் ஆகியவை மட்டுமே தற்போதைய தடுப்பு மருந்து. எதற்காகவும் சமரசம் வேண்டாம் என தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.

குறிப்பாக தற்போதைய சூழலில் யாராக இருந்தாலும் வீட்டை விட்டு வெளியே செல்லும் போது கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்பதை வலியுறுத்தி, சமூக ஊடகங்களில் தொடர்ந்து விழிப்புணர்வை ஏற்படுத்தி வரும் அமைச்சர் S.P.வேலுமணி, மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக அனைத்து நிகழ்ச்சிகளிலும் முகக் கவசம் அணிந்தே பங்கேற்கிறார்.

அனைவரும் முகக் கவசம் அணிவதை வலியுறுத்தும் வகையில், முகக்கவசம் அணிந்த தமது புகைப்படத்தை ட்விட்டர், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், ஹலோ ஆகிய சமூக ஊடகங்கள் மற்றும் தமது www.namakaaga.com இணையதளத்தின் முகப்புதிரையில் பதிவிட்டுள்ளார். இது அரசியல் கட்சியினரையும், பெரும்பாலான நெட்டிசன்களையும் கவர்ந்துள்ளது. 

கொரோனா பற்றி விழிப்புணர்வு செய்வது ஒரு பக்கம் இருந்தாலும், இந்த பேரிடர் காலத்தில் உதவும் தன்னார்வலர்களை அவர் பாராட்டியும் உற்சாகப்படுத்தியும் வருகிறார். அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் இந்தப்பணிக்கு நெட்டிசன்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

Similar News