LTTE & தாவுத் இப்ராஹிமுடன் தொடர்புடைய இலங்கை போதைப் பொருள் தாதா குணா சென்னையில் கைது.!
LTTE & தாவுத் இப்ராஹிமுடன் தொடர்புடைய இலங்கை போதைப் பொருள் தாதா குணா சென்னையில் கைது.!
இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமரதுங்காவை படுகொலை செய்ய முயன்ற சதித்திட்டத்தின் தொடர்புடைய LTTE உறுப்பினர் குணசேகரன் மற்றும் அவரின் இன்னும் சில கூட்டாளிகளான திலீபன், கென்னடி, விக்னேஸ்வர பெருமாள், போம்மா மற்றும் பிரபாகரன் ஆகியோர் ஞாயிற்றுக் கிழமை இரவு சென்னையில் கைது செய்யப்பட்டனர்.
குணசேகரன் அல்லது சின்னையா குணசேகரன், இலங்கையில் ஒரு பெரிய போதைப் பொருள் அதிபராக இருந்தான். பல்லாண்டுகளாக இந்தியாவில் மிகவும் தேடப்படும் குற்றவாளியாக இருக்கும் நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிமின் நெருங்கிய கூட்டாளியான அலஹாபெருமகா சுனில் காமினி அல்லது பொன்சேகாவுடன் வலுவான உறவுகளைக் கொண்டிருந்தான். போலி பாஸ்போர்ட் வைத்திருந்த குற்றச்சாட்டில் 2003 ல் பொன்சேகா கைது செய்யப்பட்டார், ஆனால் 2011 ல் ஜாமீனில் வெளியே வந்த பின்னர் தலைமறைனார். பிறகு கடந்த ஆண்டு அக்டோபரில் கைது செய்யப்பட்ட அவன் அன்றிலிருந்து விசாரணையில் உள்ளான்.
நக்சல் இயக்கம் தொடர்பான வழக்குகளைப் பார்க்கவும் விசாரிக்கவும் காவல்துறையின் இந்த கியூ கிளை பிரத்தியேகமாக உருவாக்கப்பட்டது. குணசேகரன் டெல்லிக்குச் செல்லவிருந்தபோது தடுத்து நிறுத்தினர். தாவூத்தின் கூட்டாளியான பொன்சேகாவுடன் குணசேகரனின் உரையாடல்களைக் கண்டுபிடித்ததன் மூலம் இது சாத்தியமானது.
இலங்கையில் ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்ட கிளர்ச்சி இனக்குழுவான விடுதலைப் புலிகளுடன் குணசேகரனுக்கு நெருங்கிய உறவு இருப்பதாக நம்பப்படுகிறது.
குணாவின் வாக்குமூலத்தின் அடிப்படையில், மத்திய குற்றப்பிரிவு அவரது மகன் கென்னடி அல்லது பும்மா உட்பட நான்கு பேரை திங்களன்று சென்னையில் ஒரு மறைவிடத்தில் இருந்து கைது செய்தது. கைது செய்யப்பட்ட 5 பேரும் செங்கல்பேட்டை துணை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
1999 ஆம் ஆண்டில் இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமரதுங்கா மீது தாக்கப்பட்ட தாக்குதலின் ஒரு பகுதியாக குணா இருந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது, அதில் சந்திரிகா வலது கண்ணில் பார்வை இழந்தார்.