உங்க ஊருக்கு வந்தா குண்டு வச்சு கொன்னுருவீங்க - பாகிஸ்தானை கண்டு அஞ்சி ஓட்டம் பிடிக்கும் கிரிக்கெட் அணி : இந்தியாவின் மீது போடப்பட்ட பழி.!

உங்க ஊருக்கு வந்தா குண்டு வச்சு கொன்னுருவீங்க - பாகிஸ்தானை கண்டு அஞ்சி ஓட்டம் பிடிக்கும் கிரிக்கெட் அணி : இந்தியாவின் மீது போடப்பட்ட பழி.!

Update: 2019-09-12 14:37 GMT

இலங்கை கிரிக்கெட் அணி வரும் 27-ஆம் தேதி 3
ஒருநாள், 3 டி-20 என இரண்டு விதமான போட்டிகளைக் கொண்ட தொடரில் பங்கேற்கப்
பாகிஸ்தான் செல்வதாக அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்தது.  2009-ஆம்
ஆண்டு நிகழ்ந்த தீவிரவாதிகள் தாக்குதலைக் கருத்தில் கொண்டு கேப்டன்
மலிங்கா, முன்னாள் கேப்டன்கள் மேத்யூஸ், சண்டிமால் மற்றும் திசாரா பெரேரா
உள்பட 10 வீரர்கள், “பாகிஸ்தான் மண்ணில் விளையாட விருப்பமில்லை” என
அறிவித்தனர். 


இலங்கை வீரர்களின் இந்த முடிவுக்கு இந்திய அரசு தான் காரணம் எனப்
பாகிஸ்தான் நாட்டின் தொழில் நுட்ப அமைச்சர் பவத் உசேன் சவுத்ரி டுவிட்டர்
பக்கத்தில் தெரிவித்தார். அதில், “இலங்கை வீரர்கள் பாகிஸ்தானில் விளையாட
மறுப்பதற்கு இந்தியாதான் காரணம். பாகிஸ்தானில் விளையாடினால் ஐபிஎல்
போட்டியில் விளையாட முடியாது என இந்தியா அவர்களை மிரட்டியது. இதன்
காரணமாகவே இலங்கை வீரர்கள் பாகிஸ்தான் மண்ணில் விளையாட மறுக்கின்றனர். இதை
விளையாட்டு வர்ணனையாளர்கள் என்னிடம் தெரிவித்த னர். இது மலிவான
தந்திரமாகும். விளை யாட்டில் மூர்க்கத்தனமாக நடந்து கொள்ளும் இந்தியாவின்
இந்த செயல் கண்டிக்கத்தக்கது. இந்திய விளையாட்டு அதிகாரிகளின் நடவடிக்கை
மிகவும் மலிவானது” எனப் பதிவிட்டுள்ளார். 


பவத் உசேன் கருத்தை ஏற்க மறுத்த இலங்கை விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரின்
பெர்னாண்டோ தனது டுவிட்டர் பக்கத்தில் பதிலடி கொடுத்துள்ளார். அதில்,
“இந்தியாவின் வற்புறுத்தல் காரண மாகத்தான் இலங்கை வீரர்கள் பாகிஸ்தான்
தொடரைப் புறக்கணித்தனர் என்பதில் எந்த உண்மையும் இல்லை. 2009 சம்பவத்தை
மனதில் வைத்து அவர்கள் முடிவை எடுத்து ள்ளனர். நாங்கள் வலுவான அணியைப் பாகி
ஸ்தானுக்கு அனுப்புவோம். பாகிஸ்தா னுக்கு எதிரான தொடரைக் கைப்பற்றுவோம்
என்ற நம்பிக்கை உள்ளது” என்று பதிவிட்டுள்ளார். இலங்கை வீரர்களின்
தனிப்பட்ட பிரச்சனைக்கு இந்தியா தான்  காரணம் எனப் பாகிஸ்தான்  அரசு ஆதார
மில்லா குற்றச்சாட்டைக் கூறியுள்ளதால் இந்திய கிரிக்கெட் வாரியம்
ஐசிசி-யிடம் புகார் அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Similar News