எஸ்.எஸ்.சி தேர்வுகளை இனி தமிழில் எழுதலாம் - அசத்தும் மத்திய அரசு!

எஸ். எஸ்.சி என்று அழைக்கப்படும் மத்திய அரசு பணியாளர் தேர்வுகளை இனி தமிழில் எழுதலாம் என்று மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது.

Update: 2023-04-19 12:30 GMT

மத்திய அரசின் பணிகளில் சேர்வதற்கு மத்திய பணியாளர் தேர்வாணையம் மூலம் தேர்வு நடத்தப்படுகிறது. இந்த தேர்வுகள் இதுவரை இந்தி மற்றும் ஆங்கிலம் என இரு மொழிகளில் மட்டுமே நடத்தப்பட்டு வந்தன . இந்த தேர்வுகளை பிராந்திய மொழிகளிலும் நடத்த வேண்டும் என பல்வேறு மாநிலங்கள் குறிப்பாக தென் மாநிலங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தன .


இந்த நிலையில் மத்தியப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் எஸ்.எஸ்.சி , எம்.டி.எஸ் மற்றும் சி.எச்.எஸ்.எல் ஆகிய தேர்வுகளை தமிழ், தெலுங்கு, குஜராத்தி கன்னடா ,மலையாளம் உட்பட 13 மாநில மொழிகளில் நடத்துவதற்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்குகிறது . மத்திய அரசின் பணிகளில் சமவாய்ப்பு கிடைக்க வேண்டும், மேலும் மொழியால் ஒருவரது உரிமை போகக்கூடாது என்ற பிரதமர் நரேந்திர மோடியின் தொலைநோக்கு பார்வைக்கு இணங்க இந்த நடவடிக்கை இருப்பதாக மத்திய பணியாளர் துறை இணை மந்திரி ஜிதேந்திர சிங் தெரிவித்தார்.


முன்னதாக மத்திய ஆயுதப்படை தேர்வான சி.ஏ.பி.எப் தேர்வுகளை தமிழ் உள்ளிட்ட 13 பிராந்திய மொழிகளில் எழுதுவதற்கு மத்திய அரசு கடந்த சில தினங்களுக்கு முன்பு அனுமதி வழங்கியது குறிப்பிடத்தக்கது.


 



 


Similar News