வரலாறு என்ற பெயரில் கதைகள் கற்பிக்கப்படுகின்றன - பிரதமர் மோடி என் அப்படி கூறினார்?

வெற்றியின் உச்சங்களை அடைய இந்தியா குறுகிய கண்ணோட்டத்தில் இருந்து விடுபட வேண்டும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

Update: 2022-12-27 12:52 GMT

வெற்றியின் உச்சங்களை அடைய இந்தியா குறுகிய கண்ணோட்டத்தில் இருந்து விடுபட வேண்டும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

சீக்கிய குரு கோவிந்த் சிங் மற்றும் அவரது மகன்களின் நினைவாக வீர் பால் தினம் அனுசரிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு டெல்லி மேஜர் தயான் சந்த் மைதானத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிகள் பிரதமர் மோடி பங்கேற்றார்.

பின்னர் அந்த நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி பயங்கரவாதத்திற்கு எதிராக கோவிந்த் மலைபோல் நின்றதாக கூறினார். மேலும் நாட்டின் வரலாறு நம்பிக்கையால் நிரம்பி இருக்க வேண்டும் எனவும் துரதிர்ஷ்ட வசமாக வரலாறு என்ற பெயரில் தாழ்வு மனப்பான்மைக்கு வழிவகுக்கும் கதைகள் மட்டும் கற்பிக்கப்படுவதாகவும் பிரதமர் மோடி கூறினார்.


Source - Polimer News

Similar News