பாஜகவை ஆதரித்தால் மக்களுக்கும் நல்லது, கட்சிக்கும் நல்லது !! குமாரசாமி கட்சி எம்எல்ஏ பேச்சால் பரபரப்பு!!

பாஜகவை ஆதரித்தால் மக்களுக்கும் நல்லது, கட்சிக்கும் நல்லது !! குமாரசாமி கட்சி எம்எல்ஏ பேச்சால் பரபரப்பு!!

Update: 2019-07-27 05:18 GMT


நான்காவது முறையாக கர்நாடகா முதல்வராக எடியூரப்பா நேற்று பதவியேற்றார். ஒரு வாரத்திற்குள் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என கவர்னர் வஜூபாய்வாலா எடியூரப்பாவிற்கு உத்தரவிட்டுள்ளார். 
இந்நிலையில் குமாரசாமி தலைமையிலான மதசார்பற்ற ஜனதா தள கட்சி , பா.ஜ.க விற்கு ஆதரவு அளிக்க வேண்டும் என அக்கட்சி எம்.எல்.ஏ. ஒருவர் வெளிப்படையாக கருத்து தெரிவித்துள்ளார். அவரின் இந்த கருத்து கர்நாடகாவில் நேற்று மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


நேற்று மதசார்பற்ற ஜனதா தள கட்சி எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு பின் மதசார்பற்ற ஜனதா தள கட்சி எம்.எல்.ஏ. ஜி.டி. தேவகவுடா கூறியது, காங்கிரசுடன்  இணைந்து எதிர்க்கட்சி வரிசையில் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சி அமருவதைவிட பா.ஜ.க வுக்கு வெளியில் இருந்துஆதரவு அளித்து கூட்டணியை புதுப்பித்தால் மக்களுக்கும் நல்லது, நமது கட்சிக்கு நல்லது. 
இதனை குமாரசாமி தான் முடிவு செய்ய வேண்டும் என்றார்.சட்டசபையில் எடியூரப்பா மீண்டும் பலபட்ரீச்சை நடத்த உள்ள நிலையில் மதசார்பற்ற ஜனதா தள கட்சி எம்.எல்.ஏ. ஒருவர் திடீரென கருத்து தெரிவித்துள்ளது திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.


Similar News