காசுக்காக உய்க்குர் முஸ்லிம்களை சீனாவுக்கு திருப்பி அனுப்பும் தலிபான் ? - என்ன ஆனது 'இஸ்லாம் சகோதரத்துவம்' ?
தலிபான் தீவிரவாதிகள் உய்கர் சிறுமிகளை அழைத்துச் சென்றதாக தகவல்கள் வந்துள்ளன.
ஆகஸ்ட் 15 அன்று ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றிய பிறகு, ஆப்கானிஸ்தானில் வாழும் உய்குர் முஸ்லிம்கள்கள் மத்தியில் பதற்றங்கள் அதிகரித்துள்ளது. பெரும் தொகை பணத்திற்காக அவர்கள் சீனாவுக்கு திருப்பி அனுப்பப்படலாம் என்ற அச்சம் அதிகரித்து வருகிறது.
தலிபான்களின் கட்டுப்பாட்டில் உள்ள ஆப்கானிஸ்தானில் தற்போது சுமார் இரண்டாயிரம் உய்குர் முஸ்லிம்கள் வசித்து வருகின்றனர். ரேடியோ ஃப்ரீ ஆசியாவின் அறிக்கையின்படி தலிபான் தீவிரவாதிகள் உய்கர் சிறுமிகளை அழைத்துச் சென்றதாக தகவல்கள் வந்துள்ளன.
சர்வதேச இஸ்லாமிய பயங்கரவாத குழு அல்கொய்தா, "ஐரோப்பா மற்றும் கிழக்கு ஆசியாவில் உள்ள மக்களை அமெரிக்க மேலாதிக்கத்தின் பிடியில் இருந்து விடுபட" அழைப்பு விடுத்தது, சீனாவின் சின்ஜியாங்கில் உள்ள உய்குர் முஸ்லிம்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து எதுவும் கருத்து சொல்லவில்லை.
ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் வெற்றி பெற்றதற்கு அல்கொய்தா வாழ்த்து தெரிவித்ததுடன், காஷ்மீர், பாலஸ்தீனம், மக்ரெப் (வடமேற்கு ஆப்பிரிக்கா) ஆகியவற்றை "இஸ்லாத்தின் எதிரிகளின் பிடியிலிருந்து" விடுவிக்க உம்மா (உலகளாவிய இஸ்லாமிய சமூகம்) வருமாறும் அழைப்பு விடுத்தது. அல்கொய்தா, தலிபான்கள் மற்றும் பயங்கரமான ஹக்கானி நெட்வொர்க்குடன் தொடர்ந்து நெருங்கிய உறவுகளைப் பேணி வருகிறது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
உய்குர்களை பிரிவினைவாதிகளாக சீனா கருதுகிறது. பத்து லட்சத்துக்கும் மேற்பட்ட உய்குர் முஸ்லீம் இனத்தவர்கள் 'மறு கல்வி முகாம்கள்' என்று அழைக்கப்படும் நாஜி பாணி வதை முகாம்களில் அடைக்கப்பட்டுள்ளனர்.
சீனாவைப் பொறுத்தவரை கிழக்கு துர்கெஸ்தான் இஸ்லாமிய இயக்கம் (ETIM) என்ற ஒரு உய்குர் தீவிரவாதக் குழு தீவிர உள் அச்சுறுத்தலாக உள்ளது. ஆனால் ஆப்கானிஸ்தானை ஆக்கிரமிக்க தலிபான்களுக்கு ETIM போராளிகள் உதவினார்கள் என்று கூறப்படுகிறது.