'எல்லாம் ஒரு அளவுதான்' - பாகிஸ்தானுக்கு தாலிபான்கள் விடுக்கும் உச்சகட்ட எச்சரிக்கை!

Update: 2022-04-18 07:30 GMT

ஆப்கானிஸ்தானில், பாகிஸ்தான் ராணுவம் வான்வழி தாக்குதல் நடத்தியதற்கு தாலிபான்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். 

பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் எல்லை பகுதிகளில் மோதல் போக்கு ஏற்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தான் கிளர்ச்சி பயங்கரவாத படையான தெரிக்-இ-தாலிபான் தாக்குதல் நடத்தியதில் பாகிஸ்தான் ராணுவத்தினர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதற்கு பதிலடியாக பாகிஸ்தான் ராணுவம் ஆப்கானிஸ்தானில் வான்வழி தாக்குதல் நடத்தினர்.

தெரிக்-இ-தாலிபான் பயங்கரவாதிகளை குறிவைத்து நடத்தியதாக பாகிஸ்தான் கூறியது. ஆனால், ஆப்கான் பொதுமக்கள் பலர் உயிரிழந்துள்ளனர். மொத்த உயிரிழப்பு 40 தாண்டியதாக தெரிவிக்கிறது. பாகிஸ்தானின் தாக்குதலுக்கு எதிராக ஆப்கான் மக்கள் போராட்டங்களை நடத்தினர்.

இது குறித்து தாலிபான் அரசின் செய்தித்தொடர்பாளர் சபியுல்லா முஜாஹித் இது குறித்து கூறுகையில், "ஆப்கானிஸ்தான் பிராந்தியத்தில் பாகிஸ்தான் நடத்திய வான் தாக்குதலை ஆப்கான் அரசு வன்மையாக கண்டிக்கிறது. எங்கள் பொறுமையை சோதிக்க வேண்டாம். இது போன்ற தவறுகள் இனி தொடர வேண்டாம். இல்லையேல் உரிய விளைவுகளை சந்திக்க நேரிடும். இரு நாடுகளின் பிரச்னைகளை அரசியல் ரீதியாக பேச்சு வார்த்தையின் மூலமே தீர்க்க வேண்டும்" என வலியுறுத்தியுள்ளார்.

பாகிஸ்தானில் புதிய ஆட்சி அமைத்த உடன் ஆப்கானிஸ்தானில் இது போன்ற ராணுவ தாக்குதல் நடைபெறுவது பெரிய அளவில் அதிர்வலையை கிளப்பியுள்ளது. 

Similar News