சீனாவில் கொண்டாடப்படும் தமிழ் - தமிழ் மொழியின் பெருமையை பறைசாற்றும் சுவாரஸ்ய தகவல்!
நம் தமிழ் மொழி உலகளாவிய மொழியாக கொண்டாடப்படுகிறது என்பதை விளக்கக் கூடிய ஒரு சுவாரஸ்யமான தகவல்
சீன தமிழ் மக்களுக்கு இடையிலான பரிமாற்றத்திற்கு 2000 ஆண்டுகளுக்கும் மேலான வரலாறு உண்டு.இந்த நீண்ட கால பரிமாற்றத்தின் வாயிலாக தமிழ் அடையாளத்துடன் கூடிய தனி சிறப்பு வாய்ந்த கட்டிடங்கள், எழுத்துக்கள், நடனம், உணவு, பண்பாடு என பலவும் சீனாவில் நிலைநிறுத்தப்பட்டுள்ளன. அவை இரு நாடுகளுக்கு இடையேயான பரிமாற்றங்களின் சின்னங்களாக திகழ்வதோடு மட்டுமல்லாமல் தமிழ் கலாச்சாரம் ,உலக அளவில் வரவேற்கப்படுவதற்குரிய ஆதாரங்களாகவும் விளங்குகின்றன. உலகப் பூங்காவில் நடராஜர் சிலை நிறுவப்பட்டுள்ளது. பீஜிங் உலகப் பூங்கா திறக்கப்பட்ட பிறகு ஆயிரக்கணக்கான சீனர்கள் இந்த நடராஜர் சிலையை பார்த்து ரசித்துள்ளனர்.சிந்து போன்ற சீனாவின் முக்கிய நகரங்களில் தென்னிந்திய உணவுகள் மக்களால் பெரிதும் விரும்பி உண்ணப்படுகின்றன. இந்த உணவுக்கு என பல இந்திய உணவகங்கள் உள்ளன.
பரதம் இந்தியாவின் மிக முக்கிய நடன கலைகளில் ஒன்றாகவும் பெருமைப்படத்தக்க தமிழ் கலையாகவும் திகழ்கிறது.சீன பரதநாட்டிய கலைகள் ஜின் ஷன்ஷன் இளம் வயதிலேயே பரதநாட்டியத்தை கற்றுக் கொண்டவர். இந்தியாவின் புகழ்பெற்ற நடன கலைஞர்களுள் ஒருவரான லீலா சாம்சனிடம் நடனம் கற்றுக்கொள்ள நான்கு முறை இந்தியா வந்தார். சீனாவுக்கு திரும்பிய பிறகு சீன மக்களிடையே இந்திய பாரம்பரிய நடனத்தை ஊக்குவிக்கும் பணியில் உறுதியுடன் ஈடுபட்டு வருகிறார். 2006 ஆம் ஆண்டில் ஜின் ஷன்ஷன் பீஜிங் இந்திய நடன கலை மையத்தை நிறுவி சீன குழந்தைகளுக்கு பரதம் கற்றுக் கொடுத்து வருகிறார். தற்போது வரை அவரது பரதநாட்டிய பள்ளியில் ஏராளமான சீன குழந்தைகள் தமிழ் பாரம்பரிய நடனத்தை கற்றுள்ளனர். இருநாட்டு தலைவர்களின் சந்திப்பின் போதும் முக்கிய பண்பாட்டு நிகழ்வின் போதும் ஜின் ஜன்ஷன்னும் அவரின் மாணவர்களும் பரதநாட்டிய அரங்கேற்றத்தில் ஈடுபட்டு தமிழ் பண்பாட்டை சீர ரசிகர்களுக்கு எடுத்துரைக்கின்றனர். சீன வானொலி நிலையமானது 1963-ஆம் ஆண்டில் தமிழ் ஒளிபரப்பினை தொடங்கியது. கடந்த 60 ஆண்டுகளில் சீன வானொலியானது எண்ணற்ற தமிழ் நிகழ்ச்சிகளை வழங்கி உள்ளது. இந்நிகழ்ச்சிகள் உலகம் முழுவதும் உள்ள தமிழர்களின் கவனத்தை பெரிதும் ஈர்த்துள்ளனர்.
அனைவருக்கும் தெரிந்த சீனாவின் பூஜ்ஜியன் மாகாணத்தின் ட்சுவன்சோ வெளிநாட்டு போக்குவரத்து வரலாற்று அருங்காட்சியகத்தில் விஷ்ணு, லஷ்மி சிலைகள் யானை , லிங்க வடிவில் நட சிற்பங்கள் தமிழ் மொழி கல்வெட்டுகள் போன்றவை காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. மேலும் அங்குள்ள கையுவான் கோவிலில் இந்து கடவுளுடன் கூடிய கல் தூண்களும் காணப்படுகின்றன.