நீட் தேர்வில் தமிழகத்தில் முதலிடம் பெற்ற அரசுப்பள்ளி மாணவி - தமிழக மாணவர்கள் மத்தியில் விலகும் நீட் பற்றிய வீண் பயம்

நீட் தேர்வில் தமிழகத்தில் முதலிடம் பெற்ற அரசுப்பள்ளி மாணவி - தமிழக மாணவர்கள் மத்தியில் விலகும் நீட் பற்றிய வீண் பயம்

Update: 2022-10-18 13:59 GMT

7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் கவுந்தப்பாடி பள்ளி அரசு பள்ளியில் படித்த மாணவி நீட் தேர்வில் தமிழகம் அளவில் முதலிடம் பிடித்துள்ளார்.

ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி, கொம்பன் பட்டி அருகே ராமசாமி வீதியைச் சேர்ந்தவர் வேலுச்சாமி, 59 வயதான நெசவு தொழிலாளி சமீபத்தில் இறந்தார். இவரது மகள் தேவதர்ஷினி கவுந்தப்பாடி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் டூ பொதுத்தேர்வில் 576 மதிப்பெண் எடுத்தார், ஜூலை மாதம் நடந்த நீட் தேர்வில் 518 மதிப்பெண் எடுத்தார்.

இந்நிலையில் மருத்துவம் மற்றும் பி.டி.ஸ் படிப்புகளுக்கு 7.5 சதவிகித அரசு இட ஒதுக்கீட்டிற்கு தரவரிசை பட்டியல் நேற்று வெளியானது இதில் அரசு பள்ளியளவில் தேவதர்ஷினி தமிழகத்தில் முதல் இடத்தில் பிடித்துள்ளார். இதனை அடுத்து பள்ளிக்கு சென்ற மாணவிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் மணிமேகலை மற்றும் ஆசிரியர்கள் வாழ்த்து தெரிவித்து பாராட்டினர்.



Source - Dinamalar

Similar News