அடுத்த உலகத் தமிழ் மாநாடு திருச்சியிலா?

திருச்சியில் உலகத்தமிழ் மாநாட்டை நடத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

Update: 2022-09-10 10:00 GMT

தமிழ் வளர்ச்சிக்கும், தமிழ் ஆர்வலர்களுக்கும் மிகப் பெரிய களமாக உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடுகள் விளங்குகின்றன. இந்த மாநாட்டை நடத்துவது தமிழக அரசுகள் பெரிய கவுரவமாக கருதுகின்றன. தமிழ் மொழியின் வளர்ச்சிக்கான திட்டங்களை வகுக்கவும் உலகெங்கும் வாழும் தமிழர்களை ஒன்றிணைக்கும் வகையிலும் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை உலகத்தமிழ் மாநாடு நடத்த வேண்டும் என்று 1964ஆம் ஆண்டு டெல்லியில் தொடங்கப்பட்ட உலகத்தமிழ் ஆராய்ச்சி மன்றத்தில் முடிவு செய்யப்பட்டது.


அந்த வகையில் முதன்முதலாக முதல் மாநாடு 1966 ஆம் ஆண்டு கோலாலம்பூரில் (மலேசியா) நடத்தப்பட்டது .அதே தொடர்ந்து சென்னை (1968),பாரிஸ்(1970), இலங்கை(1974) ,மதுரை(1981), கோலாலம்பூர்(1987) ,மொரிஷியஸ்(1989) , தஞ்சாவூர் (1995),கோலாலம்பூர்(2015), சிகாகோ(2019) ஆகிய இடங்களில் நடத்தப்பட்டன. உலக தமிழ் செம்மொழி மாநாடு 2010 ஆம் ஆண்டு கோவையில் நடைபெற்றது.


இந்த நிலையில் 12வது உலகத் தமிழ் மாநாட்டை திருச்சியில் நடத்த வேண்டும் என்று பல்வேறு அமைப்பினர் ,தமிழ் ஆவலர்கள் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். தமிழகத்திற்கு திருச்சி மையப்பகுதி என்பதால் அதை அரசிடம் தமிழார்வலர்கள் அறிவுறுத்துகின்றனர். வலியுறுத்துகின்றனர் இந்த நிலையில் திருச்சி துவரங்குறிச்சி முஸ்லிம் கிழக்கு தெருவை சேர்ந்த நரம்பியல் டாக்டர் எம். ஏ .அலீம் , உங்கள் தொகுதியில் முதலமைச்சர் துறைக்கு கடந்த ஏப்ரல் 1ஆம் தேதி மனு அளித்திருந்தார். அதில் 12-வது உலக தமிழ் சங்க மாநாட்டை திருச்சியில் நடத்த வேண்டும் அதற்கு அரசு ஒப்புக்கொள்ளுமா? என்று கேட்டிருந்தார்.


மேலும் அவர் இதுவரை 11 உலகத்தமிழ் மாநாடுகள் நடைபெற்றுள்ளன. பதினோராவது மாநாடு சிகாகோவில் நடந்தது .இதுவரை திருச்சியில் உலகத்தமிழ் மாநாடு எதுவுமே நடத்தப்படவில்லை .எனவே 12-ஆம் உலக தமிழ் மாநாட்டை திருச்சியில் நடத்தும்படி முதலமைச்சர் மு .க ஸ்டாலினை கேட்டுக்கொள்கிறேன். அந்த மாநாட்டை 'திராவிட கலாச்சாரம்' மற்றும் 'அறிவியல் தமிழ்' என்ற தலைப்பில் நடத்த வேண்டும் என்று கூறியுள்ளார்.


அந்த மனுவுக்கு தற்போது தமிழ் வளர்ச்சி இயக்குனர் பதில் கடிதம் அனுப்பி உள்ளார் .அதில் திருச்சியில் உலகத்தமிழ் மாநாட்டை நடத்துவது என்பது அரசின் கொள்கை முடிவுவாகும் என்றும் அதன் மூலம் மனுதாரரின் கோரிக்கை ஏற்கப்பட்டுள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது. அதன்படி அடுத்த உலக தமிழ் மாநாடு திருச்சியில் நடைபெறும் என்பது உறுதியாகி இருக்கிறது .அந்த மாநாடு நடைபெறும் தேதியை அரசு பின்னர் அறிவிக்கும்.





 


Similar News