எங்களுக்கு போலீஸ்தான் கேஸை விசாரிக்கனும், NIA வேண்டாம் - அடம்பிடிக்கும் எஸ்.டி.பி.ஐ! ஏன்?

கோவை கார் வெடிப்பு சம்பவம் குறித்து தமிழக காவல்துறையே விசாரணை நடத்த வேண்டும் என்று எஸ்.டி.பி.ஐ கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

Update: 2022-10-31 06:45 GMT

எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில செயற்குழு கூட்டம் சென்னையில் உள்ள கட்சியின் மாநில தலைமையகத்தில் நடைபெற்றது. கூட்டத்துக்கு கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் தலைமை தாங்கினார். கூட்டத்தில் கட்சியின் மாநில துணைத்தலைவர் அப்துல் ஹமீது , மாநில பொதுச்செயலாளர்கள் அச.உமர் பாரூக், அகமது நவவி, நிஜாம் முகைதீன் ,மாநில பொருளாளர் அமீர் ஹம்சா, மாநில செயலாளர் அபுபக்கர் சித்திக் மற்றும் மாநில செயலகக் குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.


கூட்டத்தில் கோவை கார் சிலிண்டர் வெடிப்பு நிகழ்வு குறித்த வழக்கை தமிழக காவல்துறையே விசாரணை நடத்தி உண்மையை வெளிப்படுத்தி தமிழக மக்களின் அச்சத்தை போக்க வேண்டும். மாநில உரிமைகளை பறிக்கும் முயற்சியில் மத்திய பா.ஜ.க அரசு ஈடுபட்டு வரும் நிலையில் தமிழகம் முழுவதும் எஸ்.டி.பி.ஐ சார்பில் 'மாநில சுயாட்சி பாதுகாப்பு பொதுக்கூட்டம் நடத்துவது , இந்தி திணிப்புக்கு எதிராக அனைத்து மாவட்டங்களிலும் ஆர்ப்பாட்டம் நடத்துவது என்பது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.





 



Similar News