பிரதமரிடம் இலங்கைவாழ் இந்துக்கள் கோரிக்கைகளை எடுத்துச்செல்லுங்கள் - SG.சூர்யாவிடம் அமெரிக்காவில் கோரிக்கை விடுத்த 'இலங்கை இந்து ஒன்றியம்' அமைப்பினர்

பாரதிய ஜனதா கட்சியின் தமிழக மாநில செயலாளர் SG.சூர்யா ( அவர்களுடன் 'இலங்கை இந்து ஒன்றியம்' அமைப்பு ஒரு மணிநேர காணொளி காட்சி கலந்துரையாடலில் நேற்று மாலை ஈடுபட்டது.

Update: 2022-10-07 05:20 GMT

பாரதிய ஜனதா கட்சியின் தமிழக மாநில செயலாளர் SG.சூர்யா ( அவர்களுடன் 'இலங்கை இந்து ஒன்றியம்' அமைப்பு ஒரு மணிநேர காணொளி காட்சி கலந்துரையாடலில் நேற்று மாலை ஈடுபட்டது.

இரண்டு வார பயணமாக அமெரிக்கா சென்றுள்ள பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை மற்றும் பா.ஜ.க மாநில செயலாளர் SG.சூர்யா ஆகிய இருவரும் பல்வேறு நிகழ்ச்சிகளில் தனித்தனியாக பங்கேற்கின்றனர். அதில் பா.ஜ.க மாநில செயலாளர் SG.சூர்யா நேற்று மாலை 'இலங்கை இந்து ஒன்றியம்' அமைப்பின் உறுப்பினர்களோடு காணொளி காட்சி வாயிலாக கலந்துரையாடலில் ஈடுபட்டார்.

இந்த கலந்துரையாடல், 'இலங்கை இந்து ஒன்றியத்தின்' தலைவர், செயலாளர், சர்வதேச அமைப்பாளர் உற்பட 14 நிரந்தர உறுப்பினர்களும் கலந்துகொண்டு 'இலங்கை இந்து ஒன்றியம்' பா.ஜ.க மாநில செயலாளர் SG.சூர்யா அவர்களுடன் ஆர்வமாக உரையாடினர்.

அந்த உரையாடல் சமயத்தில் இந்தியாவில் வாழும் சுமார் 94,000 இலங்கை அகதிகள் தொடர்பாக தமிழக பா.ஜ.க முன்னெடுக்கவேண்டிய செயல்பாடுகள் மற்றும் இந்தியா வழங்கியுள்ள உதவிகள், அந்த உதவிகள் மக்களுக்கு போய்சேரும் விதம் தொடர்பான விஷயங்களும், இலங்கைவாழ் தமிழர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள், தமிழர் அடையாளங்களை அழிக்கும் மதமாற்றத்தின் தீவிரம், இவற்றிக்கு நாம் அடையாளம்கண்டுள்ள தீர்வுகள் தொடர்பான விஷயங்களை முன்னிறுத்தி ஒரு கலந்துரையாடல் முன்னெடுக்கப்பட்டது. இந்த தகவலை 'இலங்கை இந்து ஒன்றியத்தின்' தலைவர் வினோத் பாலச்சந்திரன் தெரிவித்தார்.




 

அவர் மேலும் இந்த காணொளி பற்றி விவரம் தெரிவிக்கையில், 'மோடி தலைமையிலான இந்திய அரசாங்கத்தால்' மாத்திரமே எமக்கான அரசியல் பலத்தையும், முன்னேற்றத்திற்கான உதவியையும் செய்ய முடியும். துரதிஷ்டாவசமாக இலங்கை வாழ் தமிழர்களால் முன்னெடுக்கப்படும் அரசியல் செயல்பாடுகளால் இந்திய அரசை எம் பக்கம் திருப்ப முடியாத சூழல் காணப்படுகின்றது. இந்திய அரசு எம்மிடம் எதிர்பார்க்கும் அரசியலை நாம் முன்னெடுக்கின்ற பொழுது "பரஸ்பர நன்மை" பெற்றுக்கொள்ளும் அரசியல் நகர்வுகள் முன்னெடுப்பதற்கான களம் உருவாகும்' என கூறினார்.

மேலும் இதுகுறித்து தெரிவித்த அவர் 'இருதரப்பினரும் நன்மை பெற்றுக்கொள்ளும் வகையில் அரசியல் முன்னெடுக்கின்ற பொழுதே, இந்தியாவின் பார்வை நம் பக்கம் திரும்பும் என்ற எதார்த்தத்தை அனைவரும் புரிந்துகொண்டனர், அதற்கு தகுந்தாற்போல அரசியலை முன்னெடுக்கவேண்டும். அவ்வாறான ஒரு விஷயத்தை மக்களுக்கு கொண்டு செல்லும் அரசியல் விழிப்புணர்வையும் 'இலங்கை இந்து ஒன்றியம்' கண்டிப்பாக முன்னெடுக்கும் என வினோத் பாலச்சந்திரன் தெரிவித்தார்.

'அங்கு பிரச்சனை உள்ளது, இங்கு இந்த பிரச்சனை உள்ளது என கூறுவதற்கு யாரும் தேவையில்லை, எந்தவொரு அமைப்பும் தேவையில்லை. இருக்கின்ற பிரச்சனைகளை தீர்த்துக்கொள்வதற்கான 'தீர்வுகளை' முன்னிறுத்தி அது தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தவே அமைப்புகள் தேவைப்படுகிறது. சரியான விழிப்புணர்வு மக்களுக்கு வழங்கப்பட்டால் அரசியலை முன்னெடுக்கும் அரசியல் தலைவர்கள் சரியாக செயல்படுவார்கள் அல்லது சரியாக செயல்படக்கூடியவர்களை மக்கள் தேர்ந்தெடுப்பார்கள் என்பதை வரலாறுகள் காலம் காலமாக பத்தி செய்துவந்துள்ளதை நாம் நினைவுகூர கடமைப்பட்டுள்ளோம். இப் பணியை 'இலங்கை இந்து ஒன்றியம்' சிறப்பாக செய்யும் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்' எனவும் நேற்று நடைபெற்ற இந்த காணொளி மூலமாக தெரிவிக்கப்பட்டது.

இந்திய தரப்பு தமிழ் அரசியல் தலைவர்களை நாம் சந்தித்து வருகின்றோம். இங்குள்ள பிரச்சனைகள் தொடர்பாகவும், எவ்வாறான தீர்வுகளை இலங்கைவாழ் மக்கள் எதிர்பார்க்கிறார்கள் என்பதை அவர்களுக்கு நாம் தெரியப்படுத்தி வருகின்றோம். அதன் ஒரு அங்கமாகவே இன்றும் ஒரு கலந்துரையாடல் தனியார் செயலி மூலமாக முன்னெடுக்கப்பட்டது. அதுமட்டுமின்று, இந்திய தரப்பு அரசியல் தலைவர்கள் 'எம்மிடம் இதுபோன்ற அரசியலை எதிர்பார்க்கிறார்கள்' என்பதையும் நாம் கேட்டறிந்து வருகின்றோம். எம்முடைய சமயப்பணி போலவே எம்முடைய பிரச்சனைகளை தீர்ப்பதற்கான அரசியல் விழிப்புணர்வையும் 'இலங்கை இந்து ஒன்றியம்' முன்னெடுக்கும் எனவும் வினோத் பாலச்சந்திரன் அவர்கள் தெரிவித்தார்.



Similar News