தமிழ்நாட்டின் கலாச்சாரத்தால் தேசத்திற்கே பெருமை - மோடி புகழாரம்
தமிழ்நாட்டின் புகழ்பெற்ற கலாச்சாரத்தில் ஒட்டுமொத்த தேசமும் பெருமை கொள்கிறது என்று பிரதமர் மோடி கருத்து தெரிவித்துள்ளார்.
புதிய நாடாளுமன்றத்தில் தமிழ்நாட்டின் செங்கோல் நிறுவப்பட்டது தொடர்பாக நடிகர் ரஜினிகாந்த் "இந்திய நாட்டின் புதிய பாராளுமன்ற கட்டிடத்தில் ஜொலிக்க போகும் தமிழர்களின் ஆட்சி அதிகாரத்தின் பாரம்பரிய அடையாளம் செங்கோல் .தமிழன்டா ,தமிழர்களுக்கு பெருமை சேர்ந்த பாரத பிரதமர் நரேந்திர மோடிக்கு என் மனமார்ந்த நன்றி" என ட்விட்டரில் பதிவிட்டு இருந்தார்.
அதை இணைத்து பிரதமர் மோடி செய்துள்ள டுவிட்டர் பதிவில் தமிழ்நாட்டின் புகழ்பெற்ற கலாச்சாரத்தில் ஒட்டுமொத்த தேசமும் பெருமை கொள்கிறது. புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் இந்த தலைசிறந்த மாநிலத்தின் கலாச்சாரம் பெருமைக்குரிய இடத்தை பெறுவது உண்மையிலேயே மகிழ்ச்சி அளிக்கிறது என்று கூறியுள்ளார்.