தகவல் கிடைத்தவுடன் இரவிலும் நேரம் பார்க்காது காஷ்மீரில் சிக்கிய தமிழர்களுக்கு தாயுள்ளத்துடன் உதவிக்கரம் நீட்டிய ஆளுநர் Dr.தமிழிசை - குவியும் பாராட்டு!

Update: 2021-11-03 08:45 GMT

காஷ்மீர் பகுதியில் தமிழகத்தை சேர்ந்த லாரி ஓட்டுநர்கள் பனிபொழிவின் காரணமாக ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலில் சிக்கியுள்ள தகவல் கிடைத்தவுடன் ஆளுநர் தமிழிசை உதவிக்கரம் நீட்டி அனைவரையும் பாதுகாப்பாக தங்க வைத்துள்ளார்.


தமிழகம் கோவை, சேலம் பகுதியை சேர்ந்த சரக்கு வாகன ஓட்டுனர்கள் கேரள மாநிலம் காசர்கோடு பகுதியிலிருந்து ஜம்மு - லடாக் பகுதிக்கு சரக்குகளை ஏற்றிச் செல்லும் போது ஜம்முவிலிருந்து 40 கிலோ மீட்டர் தொலைவில் கடும் பனிப்பொழிவின் காரணமாக போக்குவரத்து நெரிசலில் சிக்கி அவதிப்படுவதாகவும் அவர்கள் கொண்டு சென்ற உணவுப்பொருள்கள் தீர்ந்துவிட்டது குளிர் அதிகமாக உள்ளது என்று எங்களுக்கு உதவி வேண்டும் என்று காணொளி ஒன்றை வெளியிட்டு இருந்ததை கோயம்புத்தூர் மாவட்ட பா.ஜ.க தலைவர் நேற்று இரவு 9 மணியளவில் மாண்புமிகு தெலுங்கானா மற்றும் புதுச்சேரி ஆளுநர் டாக்டர் திருமதி.தமிழிசை சௌந்தரராஜன் அவர்களின் கவனத்திற்கு எடுத்துச் சென்றனர்.

உடனே ஆளுநர் அவர்கள் ஏ.டி.சி பதவியில் உள்ள ராணுவ மேஜர் துசார் பஜிர் உடனடியாக உதவி செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.


உடனே தெலுங்கானா ஏ.டி.சி அவர்கள் ஜம்மு ஆளுநர் திரு.சின்கா அலுவலகத்தில் உள்ள ராணுவ மேஜர் அதிகாரியை தொடர்பு கொண்டு அவர்களுக்கு வேண்டிய உதவிகளை உடனடியாக வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்ஹரிபுரா என்ற பகுதியில் நின்று கொண்டிருக்கும் வாகன ஓட்டுகளுக்கு அந்த பகுதியில் உள்ள சி.ஆர்.பி.எஃப் வீரர்களுக்கு தகவல் அனுப்பப்பட்டது. சி.ஆர்.பி.எஃப் வீரர்களும் உடனடியாக விரைந்து வாகன ஓட்டுநர்களை கண்டறிந்து அவர்களை பாதுகாப்பாக அழைத்துச்சென்று முகாம்களில் தங்க வைத்து அவர்களுக்கு தேவையான உதவிகளை வழங்கி வருகிறார்கள்.

தமிழக ஓட்டுநர்கள் பனிபொழிவில் சிக்கி தவிக்கும் செய்தியறிந்து உடனடியாக உதவிக்கரம் நீட்டிய ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் அவர்களுக்கு பாராட்டு குவிகிறது.

Similar News