தாராகிரி போர்க்கப்பல் நாட்டுக்கு அர்ப்பணிப்பு

உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட தாரா கிரி போர்க்கப்பல் நாட்டுக்கு அர்ப்பணிப்பு செய்யப்பட்டுள்ளது.

Update: 2022-09-12 12:30 GMT

இந்தியாவில் திட்டம் 17-ஏ என்ற பெயரில் உள்நாட்டில் போர்க்கப்பல்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. இந்த திட்டத்தின் கீழ் ஏற்கனவே இரண்டு கப்பல்கள் தயாரிக்கப்பட்டன. இந்த நிலையில் மூன்றாவது கப்பலாக பிரிகேட் தாராகிரி கப்பல் தயாரிக்கப்பட்டுள்ளது.இந்த கப்பல் நேற்று மும்பை மஜ்காவில் நாட்டுக்கு அர்பணிக்கப்பட்டது .கடற்படை துணை தளபதி கஜேந்திர பகதூர் சிங் முன்னிலையில் புதிய கப்பல் நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டது.


இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்தின் மறைவு காரணமாக கப்பல் அர்ப்பணிப்பு விழா எளிமையாக நடந்தது .நாட்டுக்கு புதிதாக அர்ப்பணிக்கப்பட்டுள்ள தாராகிரி கப்பல் 2738 டன் எடை கொண்டது. அதிநவீன மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இந்த கப்பல் தயாரிக்கப்பட்டுள்ளது .


எனவே இது உலகத்தில் உள்ள அதிநவீன போர்க்கப்பலுக்கு நிகரானது. மேலும் இந்த போர் கப்பலில் நவீன ஆயுதங்கள் சென்சார்கள இயங்குதள மேலாண்மை இடம்பெற்றுள்ளன.





 


Similar News