'தேஜாஸ் ' இலகுரக போர் விமானங்கள்- பாதுகாப்பு அமைச்சகம் கூறிய தகவல் என்ன?

உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட 'தேஜாஸ்' இலகுரக போர் விமானங்கள் வருங்காலத்தில் இந்திய விமான படைகள் முக்கிய பங்கு வகிக்கும் என பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Update: 2023-07-01 06:15 GMT

மத்திய அரசுக்கு சொந்தமான இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனம் 'தேஜாஸ்' இலகுரக போர் விமானங்களை தயாரித்து வருகிறது. இது அபாயம் நிறைந்த வான்வெளி பகுதியில் இயக்கக்கூடிய ஒற்றை எஞ்சின் பல்திறன் போர் விமானம் ஆகும். இந்திய விமானப்படையில் 'தேஜாஸ்' இலகுரக போர் விமானங்கள் சேர்க்கப்பட்டு இன்றுடன் ஏழு ஆண்டுகளாகின்றன.


இந்நிலையில் 'தேஜாஸ்' போர் விமானங்களும் அதன் புதிய வகைகளும் வருங்காலத்தில் இந்திய விமானப்படையில் முக்கிய பங்கு வகிக்கும் என பாதுகாப்பு அமைச்சகம் நேற்று வெளியிட்ட செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளது. கடந்த 2021-ஆம் ஆண்டு பிப்ரவரியில் 83 தேஜாஸ் எம் கே 1ஏ போர் விமானங்கள் வாங்குவதற்காக ரூபாய் 48,000 கோடி ஒப்பந்தத்தில் பாதுகாப்பு அமைச்சகம் கையெழுத்திட்டது.


அந்த போர் விமானங்கள் அடுத்த ஆண்டு பிப்ரவரி முதல் இந்திய விமான படைக்கு வழங்கப்படும். 83 விமானங்களை வாங்குவதற்கான ஒப்பந்தம் 'தேஜாஸ்' போர் விமானங்களும் இது விமானப்படை கொண்டுள்ள நம்பிக்கையை காட்டுகிறது . இந்த போர் விமானத்தில் பல மேம்படுத்தப்பட்ட அம்சங்கள் அதிநவீன வசதிகள் தாக்குதல் பகுதி இருக்கும்.


இந்த விமானத்தின் மூலம் பல்வேறு வகையான ஆயுதங்களை செலுத்த முடியும். அந்த ஆயுதங்களில் பலவும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டது என பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. 'தேஜாஸ்' போர் விமானங்களை வாங்குவதற்கு அமெரிக்கா , ஆஸ்திரேலியா, அர்ஜென்டினா, எகிப்து, இந்தோனேசியா மலேசியா மற்றும் பிலிப்பைன்ஸ் நாடுகள் ஆர்வம் காட்டி வருகின்றன எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News