தளபதியின் 'லியோ' அப்டேட் ; மகிழ்ச்சி விருந்தில் ரசிகர்கள்

தளபதியின் பிறந்த நாளை ஒட்டி லியோ படத்தின் தோற்றம் வெளியாகி ரசிகர்களை மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்தியுள்ளது.

Update: 2023-06-23 15:00 GMT

நடிகர் விஜயின் 49-வது பிறந்த நாளை தமிழகம் முழுவதும் ஏழைகளுக்கு உணவு மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கி ரசிகர்கள் நேற்று கொண்டாடினார்கள். திரை உலகினர் பலர் வலைதளத்தில் விஜய்க்கு வாழ்த்துக்கள் தெரிவித்தனர். பிறந்தநாளை ஒட்டி லியோ படத்தில் விஜய் நடிக்கும் அவரது தோற்ற போஸ்டரை பட குழுவினர் வெளியிட்டனர்.


அந்த போஸ்டரில் விஜய் தனது கையில் ரத்த களரியுடன் இருக்கும் கோடாரியை வைத்துக்கொண்டு ஆவேசமாக கத்துவது போன்ற காட்சி உள்ளது. பின்னணியில் ஒரு ஓநாயும் ஆவேசமாக குரைக்கும் காட்சி இடம் பெற்றுள்ளது. கட்டுக்கடங்காத நதிகளின் உலகில் , அமைதியான நீர் கடவுளாக மாறும் அல்லது பேயாக உருவெடுக்கும் என்று பதிவும் உள்ளது . விஜய் தோற்றம் ரசிகர்களுக்கு மிகப்பெரிய விருந்தாக அமைந்துள்ளது. அதை வலைதளத்தில் வைரல் ஆக்கி வருகிறார்கள்.


இந்த போஸ்டர் மூலம் லியோ முழுமையான அதிரடி சண்டை படமாக இருக்கும் என்று தெரிகிறது. இதில் நாயகியாக திரிஷா நடிக்கிறார். பிரபல இந்தி நடிகர் சஞ்சய்தத்  வில்னாக வருகிறார் . அர்ஜுன், பிரியா ஆனந்த், மிஷ்கின், மன்சூர் அலிகான், கௌதம் மேனன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். லோகேஷ் கனகராஜ் டைரக்ட் செய்கிறார். படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தில் உள்ளது. அக்டோபர் மாதம் திரைக்கு வர திட்டமிடப்பட்டுள்ளது.

Similar News