கி.வீரமணியை துவசம் செய்த தாமரைக்கனி!வைரலாகும் மலரும் நினைவுகள்!!
கி.வீரமணியை துவசம் செய்த தாமரைக்கனி!வைரலாகும் மலரும் நினைவுகள்!!
மிகச்சரியாக 20.7.1982 அன்று ஸ்ரீவில்லிபுத்தூர் அக்கிரகாரத்தில் ஒரு பிராமணர் கூட்டம். அவர்கள், மொத்தமாக கூடி தொகுதி எம்.எல்.ஏ தாமரைக்கனியிடம் புகார் அளித்தனர்.
அக்கிரகாரத்தில் தி.க.தலைவர் வீரமணி முதல்நாள் கூட்டம் போட்டிருந்தார். அந்த கூட்டத்தில் ஆண்டாள் பற்றியும், அந்தணர்கள் பற்றியும் அச்சில் ஏற்றமுடியா வண்ணம் அருவறுக்கத்தக்க வார்த்தைகளால் மேடையில் பேசியிருந்தார்.
அதை புகாராக தெரிவிக்க தாமரைக்கனி வீட்டில் ஒன்று கூடினர் பிராமணர்கள. அத்தனைபேரையும் அமைதிப்படுத்தினார் தாமரைக்கனி.
“எவன் என்ன பேசினாலும் உங்களுக்கு பக்கதுணையாக நானிருக்கிறேன்” என்றார் தாமரைக்கனி.
“வீரமணி இன்னும் வத்ராப்பில்தான் இருக்கிறான். இந்த வழியாதான் போகணும். கவலைப்படாம போங்க. நான் பார்த்துக்கறேன்” என்றார் தாமரைக்கனி.
அப்போதைய தமிழக முதல்வர் எம்.ஜி.ஆருக்கு டிரங்க்கால் போட்டார் தாமரைக்கனி. “தலைவா! நாளைக்கு நீங்க மதுரை வரவேண்டியிருக்கும். அத்தனை புரோக்கிராம்களையும் கேன்சல் பண்ணிடுங்க.” என்று தெளிவாக பேசிவிட்டு எம்.ஜி.ஆரின் பதிலை எதிர்பார்க்காமல் டிரங்க்காலை துண்டித்துவிட்டார் தாமரைக்கனி.
பதறிப்போன எம்.ஜி.ஆர், தாமரைக்கனி யை கண்காணிக்கும்படி ராமநாதபுரம் கலெக்டருக்கும், (அப்போ விருதுநகர் மாவட்டம் உதயமாகவில்லை) மதுரை கலெக்டருக்கும் உத்தரவிட்டிருந்தார்.
தாமரைக்கனி தலைமறைவாகி விட்டார். அவர் எங்கே இருந்தார் என்று 2 மாவட்ட கலெக்டர்களுக்கும் தெரியவில்லை.
இதற்கிடையே வத்ராப் நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு கி.வீரமணி வந்துகொண்டிருந்தார். மம்சாபுரம் விலக்கு அருகே சுமார் 50 பேர் தி.கவின் கறுப்பு சட்டையுடன்,தி.க.கொடியை ஏந்திக்கொண்டு, “தந்தை பெரியார் வாழ்க! இனமான காவலர் வீரமணி வாழ்க!” என்று கோஷம் போட்டபடி நின்றனர்.