மத்திய அரசு மீட்ட 10 சுவாமி சிலைகள் இன்று கும்பகோணம் வருகின்றன - சில தினங்களில் உரிய கோவில்களில் ஒப்படைக்கப்படவுள்ளன

வெளிநாடுகளில் இருந்து மத்திய அரசின் முயற்சியால் மீட்கப்பட்ட சென்னை வந்துள்ள 10 சாமி சிலைகளை தஞ்சை மாவட்டம் கும்பகோணம் சிறப்பு நீதிமன்றத்தில் இன்று ஒப்படைக்கப்பட உள்ளன.

Update: 2022-06-06 06:30 GMT

வெளிநாடுகளில் இருந்து மத்திய அரசின் முயற்சியால் மீட்கப்பட்ட சென்னை வந்துள்ள 10 சாமி சிலைகளை தஞ்சை மாவட்டம் கும்பகோணம் சிறப்பு நீதிமன்றத்தில் இன்று ஒப்படைக்கப்பட உள்ளன.

தமிழகத்தில் ஆயிரக்கணக்கான பழமையான கோவிலில் கலை நயம்மிக்க விலைமதிப்பற்ற கற்சிலைகளும், உலோக சிலைகளும் இருந்தன ஒரு காலங்களில் இவை திருடப்பட்டு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டன.

இதுகுறித்து கடந்த காலத்தில் பல புகார்கள் அளிக்கப்பட்ட போதிலும் எந்தவித நடவடிக்கைகளும் இல்லை, இருப்பினும் மாயமான சிலைகளை வெளிநாடுகளில் இருந்து மீட்பதற்கான முயற்சிகளை மேற்கொள்ளும் விதமாக மத்திய அரசின் முயற்சியால் அமெரிக்கா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் இருந்து சிலைகள் மீண்டும் நமக்கு திருப்பி அளிக்கப்பட்டன.

அந்த வகையில் அமெரிக்கா மற்றும் ஆசிய நாடுகளில் உள்ள அருங்காட்சியகங்களில் இருந்து மீட்கப்பட்ட சிலைகள் டெல்லியில் உள்ள இந்திய தொல்பொருள் துறையினர் வசம் ஒப்படைக்கப்பட்டன. அந்த 10 சிலைகளையும் தமிழக அரசிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி டெல்லியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நடந்தது.

வெளிநாடுகளில் இருந்து மீட்கப்பட்டு ஒப்படைக்கப்பட்ட 10 சாமி சிலைகளின் டெல்லியிலிருந்து ரயிலில் சனிக்கிழமை சென்னை வந்தன, துவாரபாலகர் நடராஜன் சிவன்-பார்வதி, குழந்தைப்பருவ சம்பந்தர், விஷ்ணு தேவி சிலைகள் சென்னை வந்தடைந்துள்ளது.

இதில் துவாரபாலகர் சிலைகள் தென்காசி மாவட்டம் அத்தானநல்லூர் மூன்றீஸ்வரர் கோவிலை சேர்ந்தவை, நடராஜர் சிலை தஞ்சை மாவட்டம் புன்னை நல்லூர் கைலாசநாதர் கோவிலையும், கங்காளமூர்த்தி, நரசிங்க நாதர் சிலைகள் தென்காசி மாவட்டம் ஆழ்வார்குறிச்சி நரசிங்க நாதர் கோவிலையும், விஷ்ணு, ஸ்ரீதேவி சிலைகள் அரியலூர் மாவட்டம் சுத்தமல்லி கிராமம் வரதராஜ பெருமாள் கோவிலையும், சிவன், பார்வதி சிலைகள் தஞ்சை மாவட்டம் தீபாம்பாள்புரம் ஸ்ரீ வான்மீகநாதர் கோவிலையும், குழந்தை சம்பந்தர் சிலையை நாகை மாவட்டம் சயனேஸ்வரர் கோவிலையும் சேர்ந்தவைகள் ஆகும்.

அமெரிக்காவிலிருந்தும், ஆஸ்திரேலியாவில் இருந்து மீட்கப்பட்ட இந்த சிலைகள் இன்று இரவு கும்பகோணம் சிலை திருட்டு தடுப்பு காவல் துறை அலுவலகத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளன இன்றைய இரவு கும்பகோணம் சிறப்பு நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட உள்ளன.


Source - One India Tamil

Similar News