'நேரு இந்தியாவை உடைக்க ஆரமித்தார், அதனை இன்றும் காங்கிரஸ் தொடர்கிறது' - மத்திய அமைச்சரின் பதிலடி

'நேருவும் ஜின்னாவும் சுயலாபத்திற்காக நாட்டை பிரித்தனர்' என காங்கிரஸ் கட்சிக்கு பா.ஜ.க பதிலடி கொடுத்துள்ளது.

Update: 2022-06-04 08:02 GMT

'நேருவும் ஜின்னாவும் சுயலாபத்திற்காக நாட்டை பிரித்தனர்' என காங்கிரஸ் கட்சிக்கு பா.ஜ.க பதிலடி கொடுத்துள்ளது.

'முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு, முகமது அலி ஜின்னா நாட்டை பிரித்தது ஞானபூர்வமான செயல்' என காங்கிரஸ் எம்.எல்.ஏ'வும், மத்திய பிரதேச முன்னாள் அமைச்சருமான சஜ்ஜன் சிங் வர்மா கருத்து தெரிவித்தார்.

இதுகுறித்து பா.ஜ.க தலைவரும், மத்திய பிரதேச அமைச்சருமான விஸ்வாஸ் சாரங் தனியார் செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளிக்கும் போது கூறியதாவது, 'பிரிவினைக்கு ஜவஹர்லால் நேரு ஆகியோரின் காங்கிரஸ்தான் காரணம் என இப்போது தெளிவாக தெரிகிறது. நாட்டின் வரலாறும் அதே கூறுகிறது ஆனால் அவர்கள் அதை நியாயப்படுத்துவது வெட்கக்கேடானது. பிரிவினையின்போது ஆயிரக்கணக்கான மக்களின் படுகொலைக்கு ஜவஹர்லால் நேரு தான் காரணம் என அர்த்தம்,


ஒருவர் பாகிஸ்தானின் அதிபராக வேண்டும் எனவும் மற்றொரு பிரதமராக வேண்டும் எனவும் விரும்பினார்கள். நேரும், ஜின்னாவும் தங்கள் அரசியல் ஆசைக்காக பிரிவினையை ஏற்படுத்தினார்கள் ஆனால் மகாத்மா காந்தி ஒன்றுபட்ட இந்தியாவை விரும்பினார்.

தற்போதுவரை சஜ்ஜன் சிங் வர்மாவின் கருத்துக்கு காங்கிரஸிலிருந்து யாரும் மறுப்பு தெரிவிக்கவில்லை, சோனியா காந்தியும், ராகுல் காந்தியும் இதை தெளிவுபடுத்தவில்லை என்றால் இதை நாங்கள் காங்கிரசின் அதிகாரபூர்வ அறிக்கையாக எடுத்துக்கொள்வோம். காங்கிரஸ் உறுப்பினர்கள் பாகிஸ்தானுக்கு ஆதரவாக பேசுகின்றனர்.

நேருவால் தொடங்கப்பட்ட இந்தியாவை உடைக்கும் பாரம்பரியத்தை அவர் குடும்பத்தினர் இன்றும் பின்பற்றுகிறார்கள்' என காட்டமாக தெரிவித்துள்ளார்.


Source - Junior Vikatan

Similar News