ஒரு கோடி மரக்கன்றுகளை நட்டு காவேரி கூக்குரல் இயக்கம் சாதனை

ஈஷா அறக்கட்டளை நிறுவனர் ஜக்கி வாசுதேவ் தொடங்கியுள்ள காவேரி கூக்குரல் இயக்கம் ஒரு கோடி மரக்கன்றுகளை தமிழ்நாட்டில் விவசாயிகளின் நிலங்களில் நடவு செய்து சாதனை படைத்துள்ளது.

Update: 2023-03-23 06:30 GMT

காவேரி கூக்குரல் இயக்கம் மாநில கள ஒருங்கிணைப்பாளர் தமிழ்மாறன் கூறியதாவது :-


மரம் சார்ந்த விவசாயம் மூலம் காவேரி நதியை மீட்டெடுப்பதற்காகவும் அதைச் சார்ந்த லட்சக்கணக்கான விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும் காவேரி கூக்குரல் இயக்கத்தை ஜக்கி வாசுதேவ் கடந்த 2019 ஆம் ஆண்டு தொடங்கினார். இயக்கத்தின் மூலம் நடப்பு நிதி ஆண்டில் தமிழ்நாட்டில் ஒரு கோடி மரக்கன்றுகளை விவசாய நிலங்களில் நட இலக்கு நிர்ணயித்து இருந்தோம். ஜக்கி வாசுதேவ் கொடுத்த விழிப்புணர்வின் தாக்கத்தாலும் ஈஷா தன்னார்வலர்களின் செயல்பாட்டாலும் இந்த இலக்கை நாங்கள் வெற்றிகரமாக நிறைவு செய்தோம்.


இதே போல் கர்நாடக மாநிலத்தில் இந்த ஆண்டு 1.30 கோடி மரக்கன்றுகள் விவசாய நிலங்களில் நடவு செய்யப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் 40 ஈஷா நாற்றுப்ண்ணைகள் செயல்பட்டு வருகின்றன . இங்கு மரக்கன்றுகள் இயற்கை முறையில் உற்பத்தி செய்யப்பட்டு ஒரு மரக்கன்று ரூபாய் 3 என விவசாயிகளுக்கு மானிய விலையில் வழங்கப்படுகிறது .இவ்வாறு அவர் கூறினார்.



 


Similar News