நாட்டின் முதல் தனியார் ராக்கெட் 15 ஆம் தேதி விண்ணில் பாய்கிறது
இந்தியாவின் முதல் தனியார் ராக்கெட் மூன்று செயற்கை கோள்களுடன் 15 ஆம் தேதி விண்ணில் பாய்கிறது
இந்தியாவின் முதல் தனியார் ராக்கெட் ஹைதராபாத்தைச் சேர்ந்த ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ் என்ற புத்தொழில் நிறுவனம் உருவாக்கியுள்ளது. இந்த ராக்கெட்டுக்கு புகழ் பெற்ற விண்வெளி விஞ்ஞானி விக்ரம் சாராபாயை நினைவுகூறும் விதத்தில் 'விக்ரம்.எஸ்'என பெயர் சூட்டப்பட்டுள்ளது.இந்த ராக்கெட்டை விண்ணில் செலுத்தும் திட்டத்திற்கு 'பிரரம்ப்' என பெயரிடப்பட்டுள்ளது.
இரண்டு இந்திய செயற்கைக்கோள்கள் ஒரு வெளிநாட்டு செயற்கைக்கோள் என மூன்று செயற்கைக்கோள்களுடன் இந்த ராக்கெட் 15ஆம் தேதி காலை 11:30 மணிக்கு சென்னையை அடுத்த ஸ்ரீஹரிகோட்டா ஏவுதளத்தில் இருந்து விண்ணில் சீறி பாய்கிறது. இந்த தகவலை ஸ்கைரூட்ஏரோஸ்பேஸ் நிறுவனத்தின் இணை நிறுவனர் பவன் குமார் சந்தனா நேற்று தெரிவித்தார்.