ஊரடங்கை தளர்த்தினால் கடுமையான விளைவுகளை சந்திப்பீர்கள் - எச்சரிக்கும் உலக சுகாதார நிறுவனம்!

ஊரடங்கை தளர்த்தினால் கடுமையான விளைவுகளை சந்திப்பீர்கள் - எச்சரிக்கும் உலக சுகாதார நிறுவனம்!

Update: 2020-04-11 13:00 GMT

ஊரடங்கு தளத்தப்படுமா அல்லது நீட்டிக்கப்படுமா என்ற கேள்வி மக்களிடையே எழுந்துள்ளது. இதுகுறித்து பிரமர் மோடி மருத்துவர்கள், மாநில முதல்வர்கள் காணொலி மூலம் ஆலோசனை நடத்தி உள்ளார். பெரும்பாலான முதல்வர்கள் ஊரடங்கை நீட்டிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. ஏற்கனவே ஒடிசா, பஞ்சாப் போன்ற மாநிலங்களில் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

உலக அளவில் இதுவரை 1 லட்சத்து 2 ஆயிரத்து 846 பேர் நோய்த்தொற்றால் உயிரிழந்தனர். உலகளவில் 17 லட்சத்து 3 ஆயிரத்து 147 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், தற்போதுள்ள சூழ்நிலையில் உலக நாடுகளில் அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கை தளர்த்தப்பட கூடாது என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

ஜெனீவாவில் ஆன்லைன் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் உலக சுகாதாரத் துறை தலைவர் டெட்ரோல் அதோநோம் கெப்ரியசஸ் பின்வருமாறு கூறியுள்ளார்: "உலக நாடுகள் நோய்த்தொற்று பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கை திட்டமிடப்பட்ட நாள்களுக்கு முன்பாகவே தளர்த்தப்பட கூடாது எனவும், தற்போதுள்ள சூழ்நிலையில் ஊரடங்கு தளர்த்தப்பட்டால், நோய்த் தொற்று பரவலின் வேகம் அதிகரிக்‍கும், அது மிகப்பெரிய ஆபத்தை ஏற்படுத்தும் என்று எச்சரித்துள்ளார்.

மேலும் கட்டுப்பாடுகளை திறம்பட நிர்வகிக்கத் தவறினால் எதிர்மறை விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றும் இதுகுறித்து சம்மந்தப்பட்ட நாடுகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக கூறினார்.

Source: Dinamani

Similar News