எச்சரிக்கையுடன் நீட் தேர்வு தொடர்பான வழக்கை ரத்து செய்த டெல்லி நீதிமன்றம் - யார் போட்ட வழக்கு தெரியுமா?

நீட் தேர்வை தள்ளி வைக்கக் கோரிய மனு தள்ளுபடி செய்து டெல்லி நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது.

Update: 2022-07-15 05:56 GMT

நீட் தேர்வை தள்ளி வைக்கக் கோரிய மனு தள்ளுபடி செய்து டெல்லி நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது.

டெல்லி ஹை கோர்ட்டில் அனுபவா ஸ்ரீ வாட்ஸாவா என்பவர் ஒரு மனு தாக்கல் செய்தார், அதில் நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் தற்போது பெய்து வரும் பருவமழையின் காரணமாக ஜூலை 17ஆம் தேதி நடைபெற உள்ள நீட் இளநிலை தேர்வினை ஒத்திவைக்க வேண்டும் என கோரி இருந்தார்.

இந்த மனுவை அவசரமாக விசாரிக்க கோரி டெல்லி ஹை கோர்ட் தலைமை நீதிபதி சதீஷ் சந்திர வர்மா தலைமையிலான அமர்வு முன் வக்கீல் மம்தா முறையிட அந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது.

விசாரணையின் முடிவில் நீட் தேர்வை ஒத்திவைக்க கூறிய மனுக்களை தள்ளுபடி செய்த நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் 'சில மாணவர்களால் செல்ல இயலவில்லை என்பதற்காக தேர்வையே ஒத்தி வைக்க கோருவது ஏற்கக்கூடியது அல்ல இனி இந்த மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டால் அபராதம் விதிக்கப்படும்' எனவும் உயர்நீதிமன்ற எச்சரித்துள்ளது.


Source - Maalai Malar

Similar News