அரசு பள்ளியில் எல்.கே.ஜி, யு.கே.ஜி வகுப்புகளுக்கு மூடுவிழா - தனியார் பள்ளிகளுக்கு ஆதரவாக தி.மு.க அரசு செயல்படுகிறதா?
தமிழ்நாட்டில் அ.தி.மு.க அரசு கொண்டுவந்த திட்டமான அரசு பள்ளிகளில் எல்.கே.ஜி மற்றும் யு.கே.ஜி வகுப்புகளை மூடுவதாக தி.மு.க அரசு அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் அ.தி.மு.க அரசு கொண்டுவந்த திட்டமான அரசு பள்ளிகளில் எல்.கே.ஜி மற்றும் யு.கே.ஜி வகுப்புகளை மூடுவதாக தி.மு.க அரசு அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்கும் வகையில் கடந்த 2018ஆம் ஆண்டு அ.தி.மு.க ஆட்சியில் எல்.கே.ஜி மற்றும் யு.கே.ஜி வகுப்புகள் அரசு பள்ளியில் துவங்கப்பட்டன.
சுமார் 2,381 பள்ளிகளில் தொடங்கப்பட்ட எல்.கே.ஜி மற்ற யு.கே.ஜி வகுப்புகளுக்கு ஏராளமான தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் பணி மாற்றம் செய்யப்பட்டு பணியமர்த்தப்பட்டனர் இதற்கு பெற்றோர் மத்தியிலும் நல்ல வரவேற்பு இருந்தது.
முக்கியமாக 2019-20 ஆம் கல்வி ஆண்டில் மாணவர்கள் சேர்க்கை நடைபெற்று எல்.கே.ஜி, யு.கே.ஜி வகுப்புகள் தொடங்கப்பட்டன, மேலும் இது சென்னை உள்ளிட்ட பெருநகரங்களில் பெற்றோர் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது அங்கு பயிலும் குழந்தைகளுக்கு சீருடை, காலணி உள்ளிட்டவை அரசு சார்பில் வழங்கப்பட்டது.
இப்படி தனியார் பள்ளியில் கட்டணத்துக்கு பயந்து அரசு பள்ளியில் மாணவர்களை எல்.கே.ஜி, யு.கே.ஜி வகுப்புகளில் சேர்த்த பெற்றோர்கள் வரவேற்ற திட்டத்தை தி.மு.க தற்பொழுது மூடுவதாக அறிவித்துள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா காரணமாக செயல்படாமல் இருந்த எல்.கே.ஜி மற்றும் யு.கே.ஜி வகுப்புகளை மூடுவதாக தி.மு.க அரசு அறிவித்துள்ளது.
இதனை காரணம் காண்பித்து பள்ளிக்கல்வித்துறை இந்த இரு வகுப்புகளையும் மூட நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இதற்கு பதிலாக சமூக நலத்துறையின் கீழ் செயல்பட்டு வரும் அங்கன்வாடி பள்ளிகளில் மழலையர் வகுப்புகள் முறை படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் எல்.கே.ஜி மற்றும் யு.கே.ஜி ஒப்புதலுக்காக பணியமர்த்தப்பட்ட ஆசிரியர்கள் மீண்டும் அவர்கள் பணியாற்றிய இடங்களுக்கே அதாவது நடுநிலைப்பள்ளிகளை மாற்றம் செய்யப்படுவார்கள்.