இனி உணவகங்களில் சேவை வரி இருக்காது - மத்திய அரசின் அடுத்த அதிரடி

உணவகங்களில் வாடிக்கையாளர்களிடம் சேவை கட்டணம் பெறுவதை தடுக்கும் வகையில் விரைவில் விதிமுறைகள் வகுக்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

Update: 2022-06-03 12:01 GMT

உணவகங்களில் வாடிக்கையாளர்களிடம் சேவை கட்டணம் பெறுவதை தடுக்கும் வகையில் விரைவில் விதிமுறைகள் வகுக்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

நுகர்வோர் விவகாரங்கள் துறையின் வழிகாட்டுதலின்படி உணவின் விலை மற்றும் வரிகளை மட்டுமே வாடிக்கையாளர்களிடம் பெறலாம் என்றும் வாடிக்கையாளரின் ஒப்புதலின்றி அவரின் சேவை கட்டணம் பெறுவது முறையற்ற வணிக நடவடிக்கை என்பதும் மத்திய அரசு குறிப்பிட்டுள்ளது.

இந்த விவகாரத்தினால் இனி உணவகங்களில் உணவுக்கான விலையும், வரியும் மட்டுமே இருக்கும் எனவும் சேவை கட்டணம் என்ற பெயரில் அதிக கட்டணம் வசூலிக்கப்பட மாட்டாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது அமல்படுத்தும் நேரத்தில் சேவை கட்டணம் விதிக்கும் உணவகங்களில் உணவு விலை குறையும் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Source - Polimer

Similar News