“ஆதாரங்களை அழிக்க முயற்சி செய்கிறார்” கற்பழிப்பு பிஷப் மீது நீதிபதியிடம் கன்னியாஸ்திரி புகார்!!

“ஆதாரங்களை அழிக்க முயற்சி செய்கிறார்” கற்பழிப்பு பிஷப் மீது நீதிபதியிடம் கன்னியாஸ்திரி புகார்!!

Update: 2019-07-30 09:11 GMT


கேரள மாநிலம் கோட்டயம் கன்னியாஸ்திரி இல்லத்தைச் சேர்ந்த கன்னியாஸ்திரி ஒருவர், பிஷப் பிராங்கோ மூலக்கல் தன்னை கற்பழித்ததாக புகார் அளித்தார். இவர் பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் மறைமாவட்ட பிஷப்பாக அப்போது இருந்தார். 


கடந்த 2014-ஆம் ஆண்டு முதல் 2016-ஆம் ஆண்டு வரை பலமுறை தன்னை அவர் கற்பழித்துள்ளார் என்று அந்த கன்னியாஸ்திரி தனது புகாரில் குறிப்பிட்டு இருந்தார். 





இதுகுறித்து வைக்கம் போலீஸ் துணை சூப்பிரண்டு தலைமையில் சிறப்பு புலனாய்வுக்குழு சம்பிரதாயத்துக்கு விசாரித்தது. 


இதனால் ஆத்திரம் அடைந்த கன்னியாஸ்திரிகள் சிலர், கற்பழிக்கப்பட்ட கன்னியாஸ்திரிக்கு ஆதரவாக உண்ணாவிரத போராட்டம் நடத்தினர். பிராங்கோ மூலக்கல்லை கைது செய்ய வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர். 





இதனைத்தொடர்ந்து வேறு வழியில்லாமல் பிராங்கோ மூலக்கல்லை கைது செய்தனர். பின்னர் அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இது தொடர்பான வழக்கு, கேரளாவின் கோட்டயம் மாவட்டம் பாலாவில் உள்ள நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.





இந்த வழக்கு விசாரணையின் போது, பிஷப் பிராங்கோ மூலக்கல்லுக்கு எதிராகப் போராடி வரும் கன்னியாஸ்திரிகளில் ஒருவர் நீதிபதியிடம் புகார் ஒன்றை கூறினார். அவர், “வழக்கின் முக்கிய ஆதாரங்களை அழிக்க பிஷப் பிராங்கோ மூலக்கல் முயற்சி செய்கிறார். வழக்கை இழுத்தடிக்கவும் அவர் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்” என்று பகிரங்கமாக குற்றம் சாட்டினார். 





இருதரப்பு வாதங்களையும் கேட்ட மாஜிஸ்திரேட் வழக்கின் அடுத்த விசாரணையை ஆகஸ்ட் 9-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.


Similar News