நெல்லை கல்குவாரி விபத்து - என்னதான் நடக்கிறது? கைதானவர்கள் யார்? யார்?

நெல்லை கல்குவாரியில் விபத்து ஏற்பட்டதில் இடிபாடுகளுக்கு இடையே சிக்கியுள்ள மூவரின் நிலை என்ன ஆனது என்று தெரியவில்லை இரண்டு நாளாக மீட்பு பணி தொடர்கிறது.

Update: 2022-05-16 14:15 GMT

நெல்லை கல்குவாரியில் விபத்து ஏற்பட்டதில் இடிபாடுகளுக்கு இடையே சிக்கியுள்ள மூவரின் நிலை என்ன ஆனது என்று தெரியவில்லை இரண்டு நாளாக மீட்பு பணி தொடர்கிறது.

நெல்லை மாவட்டம் அடைமிதிப்பான்குளம் பகுதியில் தனியாருக்கு சொந்தமான கல் குவாரி இயங்கி வருகிறது, இந்த குவாரியில் பணியாளர்கள் வேலை செய்து கொண்டிருந்தபோது திடீரென ராட்சத பாறைகள் சரிந்து விழுந்தது. அப்பொழுது மூன்று ஹிட்டாச்சி இயந்திரங்களும் இரு லாரியும் இடிபாடுகளில் சிக்கியது.


அப்போது குவாரி பணியில் ஈடுபட்டிருந்த லாரி ஓட்டுநர்களான முருகன், விஜய், செல்வம், ராஜேந்திரன், செல்வகுமார், முருகன் ஆகியோர் சிக்கிக்கொண்டனர். அவர்களின் முருகன், விஜய், ஆகியோர் நேற்று 15ஆம் தேதி மீட்கப்பட்டனர். ஹிட்டாச்சி இயந்திரத்துடன் பாறைக்குள் புதைந்து கிடந்த செல்வத்தை மீட்க கடுமையான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன எனினும் அவர் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.

மீட்டுப்பணிகள் நடக்கும்பொழுது அடுத்தடுத்து பாறைகள் சரிந்ததால் பணிகளில் தொய்வு ஏற்பட்டது, இந்த நிலையில் தேசிய பேரிடர் மீட்பு குழுவை சேர்ந்த 30 பேர் கொண்ட குழுவினர் நள்ளிரவில் நெல்லை வந்து சேர்ந்தார்கள் அவர்கள் இன்று அதிகாலை முதலாக பணிகளை துவங்கி இருக்கிறார்கள்.

பாறையின் இடிபாடுகளில் ஹிட்டாச்சி இயந்திரங்களும், லாரிகளும் வெளியில் தெரியாத வகையில் புதைந்து கிடப்பதால் மூவரின் உடல்நிலை குறித்தும் அவர்கள் குடும்பத்தினர் அச்சம் கொள்கிறார்கள்.


இந்த நிலையில் இரண்டாம் நாளாக மீட்பு பணி தொடர்வதால் தி.மு.க அமைச்சர் ராஜகண்ணப்பன், சபாநாயகர் அப்பாவு ஆகியோர் அங்கு சென்றனர். ஆனால் அங்கு சென்ற அமைச்சர் ராஜகண்ணப்பன் காரை மக்கள் கோபத்தில் மறைத்தது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே நெல்லை கல்குவாரியில் நடந்த விபத்து தொடர்பாக கல்குவாரியில் உரிமையாளர் சங்கரநாராயணன் கைது செய்யப்பட்டார். அத்துடன் குவாரி ஒப்பந்தகாரரான காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவரும், திசையன்விளை யூனியன் முன்னாள் சேர்மன் சேம்பர் செல்வராஜ், அவர் மகன் குமார், குவாரி மேலாளர் செபாஸ்டின் ஆகியோர் மீது போலீசார் வழக்கு செய்துள்ளனர்.


Source - Junior Vikatan

Similar News