தவளையாக மாறுமாறு சாபம் பெற்ற மண்டூக முனிவருக்கு கள்ளழகர் சாப விமோசனம் அளிக்கும் நிகழ்வு எப்படி நடந்தது?

The story of Kallazhaga's release of the curse to Sage Manduka, who was cursed to turn into a frog, originated the story.

Update: 2023-05-07 03:45 GMT

மதுரை கள்ளழகர் சித்திரை திருவிழாவின் சிகர நிகழ்வான மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் அளிக்கும் நிகழ்வு பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் முன்பாக வெகுவிமரிசையாக நடைபெற்றது.ஆண்டுதோறும் மண்டகபடியின் கீழ் பகுதியிலயே இந்த நிழ்வு நடைபெற்றுவந்த நிலையில் 62 ஆண்டுகளுக்கு பின்னர் கடந்த ஆண்டு போலவே இந்த ஆண்டும் தேனூர் மண்டபத்தில் உள்பகுதியில் கள்ளழகர் எழுந்திருனார்.

சாப விமோசனம் அளிக்கும் நிகழ்வை எடுத்துரைக்கும் வகையில் தேனூர் மண்டகப்படி முன்பாக திருக்குளம் போன்று வடிவமைக்கப்பட்டு நீர் நீரப்பப்பட்டு பூக்கள் மற்றும் மண்டூக முனிவரின் சிலை வைக்கப்பட்டு கொக்கு ஒன்று கட்டிவைக்கப்பட்டிருக்கும். பின்னர் கருட வாகனத்தில் எழுந்தருளிய சுந்தரராஜப்பெருமாள் நாரைக்கு முக்தி அளிக்கும் வகையில் அங்கு கட்டப்பட்டிருந்த நாரை, பூஜைக்குப் பின்னர் பறக்கவிடப்பட்டது. பின்னர் மண்டூக முனிவரின் உருவ மண் சிலைக்கு நம்மாழ்வார் திருமொழி பாடல் பாடப்பட்டு சாப விமோசனம் வழங்கும் பூஜை நடத்தப்பட்டது


சுதபஸ் என்ற மகரிஷி சுந்தரராஜ பெருமாளை நினைத்து தியானத்தில் இருந்துள்ளார். சுதபஸ் முனிவரை காண துர்வாச முனிவர் வந்தபோது தவத்தில் இருந்ததால் சுதபஸ் முனிவர் துர்வாசரைக் கவனிக்காமலும், சரியாக உபசரிக்கவில்லை. இதனால் கோபமுற்ற துர்வாச முனிவர் கோபம் மரியாதை தெரியாத மண்டூகமான நீ தவளையாகவே போ என சாபமிட்டார்.


இதனால் சாபம் பெற்ற சுதபஸ் முனிவர் தாங்கள் சாப விமோசனம் தந்தருள வேண்டும், என துர்வாச முனவரிடம் வேண்டியபோது "வேதவதிஎன்ற வைகை ஆற்றில் தவம் செய்தால் அழகர்கோவிலில் இருந்து சுந்தர ராஜ பெருமாள் வரும்போது சாப விமோசனம் கிடைக்கும் "என்று கூறியுள்ளதால் இந்த மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் அளிக்கும் நிகழ்வானது நடைபெற்றது. என்பது குறிப்பிடத்தக்கது.




Similar News