கேரளத்தில் கலவரம் ஏற்படுத்திய கடையடைப்பு போராட்டம் - மர்மநபர்கள் அட்டூழியம், மக்களின் இயல்பு வாழ்கை பாதிப்பு

கேரளாவில் முழு அடைப்பு போராட்டத்தில் வன்முறை ஏற்பட்டு பேருந்துகள் ஆட்டோ உடைக்கப்பட்டதில் 500 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Update: 2022-09-24 09:26 GMT

கேரளாவில் முழு அடைப்பு போராட்டத்தில் வன்முறை ஏற்பட்டு பேருந்துகள் ஆட்டோ உடைக்கப்பட்டதில் 500 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கேரளாவில் பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா நடத்திய முழு அடைப்பு போராட்டத்தை தொடர்ந்து 900 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். பேருந்துகளில் மீது கல்வீச்சு, ஆர்.எஸ்.எஸ், பா.ஜ.க அலுவலகங்கள் மீது தாக்குதல் என வன்முறையில் ஈடுபட்டவர்களை தடியடி நடத்தி விரட்டி அடித்தனர்.

பெட்ரோல் குண்டுகளை பைக்கில் வீச முயற்சி செய்த சிலரை சிலரை கைது செய்துள்ளதாக சட்டம் ஒழுங்கு கூடுதல் ஏ.டி.ஜி.பி செய்தியாளர்களிடம் தெரிவித்தார். கோழிக்கோடு, கொச்சின், கொல்லம், ஆலப்புழா, கன்னூர் இடங்களில் நடைபெற்ற கல்வீச்சு சம்பவங்களில் பேருந்துகள் சேதம் அடைந்தன.

திருவனந்தபுரத்தில் ஆட்டோக்கள், கார்கள் மீது கற்கள் வீசப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.


Source - Polimer News 

Similar News