4'ம் வகுப்பு மாணவனின் தலையில் இடிந்து விழுந்த மேற்கூரை - புதுக்கோட்டை மாவட்டத்தில் பகீர்

பள்ளியின் மேற்கூரை பூச்சு விழுந்ததில் மாணவர் காயமடைந்துள்ளார். இதனால் தலைமையாசிரியர் சஸ்பெண்ட் செய்யப்பட்ட விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2022-06-21 08:30 GMT

பள்ளியின் மேற்கூரை பூச்சு விழுந்ததில் மாணவர் காயமடைந்துள்ளார். இதனால் தலைமையாசிரியர் சஸ்பெண்ட் செய்யப்பட்ட விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே எஸ்.களபம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 39 மாணவர்கள் பயின்று வருகின்றனர், 40 வருடங்கள் பழமையான இந்த கட்டடம் கடந்த சில ஆண்டுகளாகவே பழுதடைந்து எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலையில் இருந்துள்ளது.

இதனை அகற்றி விட்டு புதிய கட்டிடம் கட்டித்தர வேண்டும் என மாணவர்களும் பெற்றோர்களும் அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்த நிலையில் ஆசிரியர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் இந்த தகவலை கொண்டு சென்றுள்ளனர். ஆனாலும் இதுகுறித்து நடவடிக்கை ஏதும் எடுக்காமல் அதிகாரிகள் இருந்துள்ளனர்.

இந்நிலையில் கடந்த சில நாட்களாக பள்ளிக்குள் வைத்து பாடம் நடத்தாமல் மர நிழலில் வைத்து மாணவர்களுக்கு பாடம் எடுத்து இருக்கின்றனர் ஆசிரியர்கள்.

இந்த சூழலில் நான்காம் மாடிக்கு படிக்கும் மாணவன் பரத் பழுதடைந்த அந்த கட்டடத்துக்கு உள்ளே பேனா எடுப்பதற்காக சென்றிருக்கிறார், அப்போது எதிர்பாராத விதமாக பள்ளியின் மேற்கூரைகள் இடிந்து விழுந்ததில் மாணவனுக்கு உடம்பில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. காயமடைந்த மாணவனை ஆசிரியர்கள் பெற்றோர்கள் மீட்டு சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பினர் அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதற்கிடையே தான் இந்த விவகாரம் தொடர்பாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பள்ளித் தலைமை ஆசிரியர் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.


பள்ளி மேற்கூரை பெயர்ந்து விழும் அளவிற்கு அலட்சியமாக இருந்த பள்ளி மாவட்ட நிர்வாகம், பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் போன்றவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் தலைமை ஆசிரியர் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருப்பது, சக ஆசிரியர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மத்தியில் பல்வேறு கண்டனங்களை எழுப்பியுள்ளது.


Source - Junior Vikatan

Similar News