உலகின் மிகப்பெரிய செல்வந்தனின் ஆச்சரியப்பட வைக்கும் மறுமுகம்: மண்ணின் மைந்தனாக கலக்கிக் கொண்டிருக்கும் 'பில்கேட்ஸ்'
மைக்ரோசாப்ட் கார்ப்பரேஷன் இணை நிறுவனர் பில்கேட்ஸ் பற்றி பலரும் அறியாத தகவல்
மைக்ரோசாப்ட் கார்ப்பரேஷன் இணை நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியாக பில்கேட்ஸ் ஐநாம் அனைவரும் அறிவோம். இன்று அவர்தான் அமெரிக்காவின் நம்பர் ஒன் விவசாய நில உரிமையாளர் என்றால் பலருக்கு ஆச்சரியமாக இருக்கும். பில்கேட்ஸ் அமெரிக்காவின் மிகப்பெரிய விவசாயியும் கூட .
பில்கேட்ஸ் அமெரிக்க மாநிலங்களில் 2,42,000 ஏக்கருக்கு அதிகமான விவசாய நிலங்களை வாங்கி குவித்துள்ளார். சோயாபீன்ஸ், சோளம் ,பருத்தி, நெல் உருளைக்கிழங்கு ஆகியவற்றை பயிரிட்டுள்ளார். அமேசான் நிறுவனர் ஜெப் பெசோஸ் கூட பெரிய அளவில் விவசாயத்தில் முதலீடு செய்து வருகிறார். மேற்கு டெக்சாஸில் 4,20,000 ஏக்கரில் முதலீடு செய்துள்ள ஜெப் இப்பட்டியலில் 25- வது இடத்தில் இருக்கிறார்.
SOURCE :DAILY THANTHI