பிரதமர் மோடி தலைமையில் கின்னஸ் சாதனை - வேற லெவலில் செல்லும் மத்திய அரசு!

ஐ.நா தலைமையகத்தில் பிரதமர் மோடி தலைமையில் நடந்த யோகா பயிற்சி அதிகமான நாடுகள் பங்கேற்றது என்ற வகையில் கின்னஸ் உலக சாதனை படைத்தது.

Update: 2023-06-22 04:00 GMT

அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட பிரதமர் மோடி சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு நியூயார்க் நகரில் உள்ள ஐ.நா தலைமையகத்தில் யோகா நிகழ்ச்சியை தலைமையேற்று நடத்தினார். பிரமாண்டமாக நடைபெற்று இந்த நிகழ்ச்சியில் 180க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த தூதர்கள், அதிகாரிகள், கல்வியாளர்கள், சுகாதார வல்லுனர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள், தொழில் துறை தலைவர்கள், ஊடக பிரமுகர்கள், கலைஞர்கள், ஆன்மீக தலைவர்கள் யோகா பயிற்சியாளர்கள் என்று பல்வேறு தரப்பு பிரமுகர்கள் கலந்துகொண்னர்.


இதன் மூலம் பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற இந்த யோகா நிகழ்ச்சி கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்தது. உலகில் பெரும்பாலான நாடுகளைச் சேர்ந்தவர்கள் ஒன்றாக யோகா செய்து கின்னஸ் சாதனை படைத்தனர்.

Similar News