நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை உயர்த்திய மத்திய அரசு - அனுராக் தாக்கூர் வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு

நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை குவிண்டாலுக்கு 100 ரூபாய் உயர்த்தி 2060 ரூபாயாக நிர்ணயித்து மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

Update: 2022-06-08 13:16 GMT

நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை குவிண்டாலுக்கு 100 ரூபாய் உயர்த்தி 2060 ரூபாயாக நிர்ணயித்து மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் அறிவித்தார்.

அப்போது அவர் கூறியதாவது உற்பத்தி செலவை விட ஒன்னரை மடங்கு இருக்கும் வகையில் 14 வகை விளைபொருள்களை குறைந்தபட்ச ஆதரவு விலை நிர்ணயிக்கப்பட்டு உள்ளதாக தெரிவித்தார்.

அந்த வகையில் 2022-23 காரிப் பருவத்தில் முதல் தர நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை குவிண்டாலுக்கு 1960 ரூபாயிலிருந்து 2060 ரூபாயாகவும், சாதாரண நெல்லுக்கு 1940 ரூபாயிலிருந்து 2040 ரூபாயாகும் தலா 100 ரூபாய் உயர்த்தி உள்ளதாக குறிப்பிட்டார். இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


Source - Polimer

Similar News