ஜூம் செயலியை பயன்படுத்துவது மிகவும் ஆபத்தானதா, ஏன் ?

ஜூம் செயலியை பயன்படுத்துவது மிகவும் ஆபத்தானதா, ஏன் ?

Update: 2020-04-16 14:49 GMT

இதனால் ஐடி துறையில் வேலை பார்ப்பவர்களை தனியார் நிறுவனங்கள் வீட்டிலிருந்தபடியே வேலை பார்க்கலாம் என அறிவித்தது. ஆகவே பலரும் வீட்டிலிருந்தபடியே தங்கள் உயர் அதிகாரிகளை வீடியோ கான்பரன்ஸ் மூலம் தொடர்பு கொண்டு ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

மேலும் ஜூம் செயலியை அதிகமாக பயன்படுத்தி வருகிறார்கள். இதன் மூலம் யாரிடம் வேண்டுமென்றாலும் வீடியோ கான்பிரன்ஸ் மூலம் கலந்துரையாடலாம். இதனை அரசு ஊழியர்கள் கூட பயன்படுத்தி வருகிறார்கள் என கூறப்படுகிறது.

இந்த செயலியை பயன்படுத்தும் 5 லட்சம் கணக்குகளை ஹேக்கர்கள் ஹேக் செய்ததாக நேற்று தகவல் வெளியாகி உள்ளது. இதனை தொடர்ந்து மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில் ஜூம் செயலி மிகவும் ஆபத்தானது இது பாதுகாப்பானது இல்லை. இதை யாரும் பயன்படுத்த வேண்டாம் என தெரிவித்துள்ளது.

ஜூம் செயலியைப் பயன்படுத்த தங்கள் நிறுவன தொழிலாளர்களுக்கு கூகுள் நிறுவனம் தடை விதித்துள்ளது என கூறப்படுகிறது. சிங்கப்பூரில்,ஜெர்மனி, தைவான் உள்பட நாடுகளில் இந்த செயலியை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளன.

Source: https://www.dailythanthi.com/News/India/2020/04/16170410/Zoom-Not-Safe-Government-Warns-People-On-Video-Conference.vpf  

Similar News