பூனை குட்டி என்று நினைத்து கருஞ்சிறுத்தை குட்டியை வளர்த்து வந்த பெண்- விஷயம் அறிந்தும் பாசத்தால் விடவில்லை

காட்டில் தனியாக கிடந்த குட்டியை பூனை குட்டி என்று நினைத்து எடுத்து வந்து வளர்த்து வந்திருக்கிறார் ஒரு பெண். அது நாளடைவில் வளர்ந்த பின்னர் சிறுத்தை குட்டி என்று தெரிய வந்திருக்கிறது.

Update: 2023-09-27 15:30 GMT

சமீபத்தில் ரஷ்யாவை சேர்ந்த விக்டோரியா என்ற பெண் வித்தியாசமான காரணம் ஒன்றிற்காக பத்திரிக்கை தலைப்புச் செய்திகளில் இடம் பிடித்தார். சைபீரியா காட்டுப் பகுதியில் கைவிடப்பட்டு, தன்னந்தனியாக கிடந்த பூனை குட்டி ஒன்றை கண்டெடுத்துள்ளார் விக்டோரியோ. இங்கேயே விட்டு சென்றால் அதன் உயிருக்கே ஆபத்தாக முடியும் என்று நினைத்த விக்டோரியா, சாதாரண பூனைக்குட்டி தானே என தன் வீட்டிற்கே எடுத்துச் சென்றுள்ளார். அது பூனை குட்டி அல்ல, சைபீரியன் ஜூவில் பிறந்த லூனா என்ற பெயருடைய கருஞ்சிறுத்தை குட்டி என்று அப்போது அவருக்கு தெரியாது.


நாளடைவில் லூனாவின் உடல்நிலையில் முன்னேற்றம் காண தொடங்கியதும், மெல்ல, மெல்ல அதன் உண்மையான சுயரூபம் தெரிய ஆரம்பித்தது. இருந்தாலும், அதன் மீது கொண்ட பாசத்தால் கருஞ்சிறுத்தை என்று தெரிந்த பிறகும் அதைவிட்டு பிரியாமல் இருந்தார் விக்டோரியா. இதற்கென்றே டிக் டாக்கில் @Luna_the_pantera என்ற பெயரில் கணக்கை தொடங்கி, கருஞ்சிறுத்தை குட்டியின் அன்றாட செயல்பாடுகளை பதிவிட்டு வந்தார். இவர் பதிவிடும் கருஞ்சிறுத்தை குட்டி வீடியோக்களுக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் இருக்கிறார்கள்.


லூனா எவ்வுளவுதான் அழகாக இருந்தாலும், அது ஒரு வனவிலங்கு என்பதையும் எந்த நேரத்தில் அது எப்படி நடந்துகொள்ளும் என்பதையும் யாராலும் கணிக்க முடியாது. இதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். முறையாக பராமரிக்காவிட்டால், சக்திவாய்ந்த அதன் உடலமைப்பும், கூர்மையான பற்களும் எந்த சமயத்திலும் ஆபத்தை விளைவிக்கலாம். ஆனால் சிறு வயதில் இருந்தே வீட்டிலேயே வளர்ந்ததால், மற்ற சிறுத்தைகள் போல் இல்லாமல் மிகவும் சாந்தமான விலங்காக இருக்கிறது லூனா.


SOURCE :news18.com 

Similar News