காங்கிரஸில் இருந்தால் சுயமரியாதை கிடையாது - ரோஷமுடன் வெளியேறிய காங்கிரஸ் தலைவர்

இமாச்சல பிரதேச காங்கிரசின் வழிகாட்டுதல் குழு தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக ஆனந்த் சர்மா அறிவித்துள்ளார்

Update: 2022-08-21 14:15 GMT

ஹிமாச்சல பிரதேச காங்கிரசின் வழிகாட்டுதல் குழுத் தலைவர் பதவியிலிருந்து விலகுவதாக அக்கட்சி மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ஆனந்த் சர்மா அறிவித்துள்ளார்.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஜம்மு-காஷ்மீர் பிரசார குழு தலைவராக முன்னாள் மத்திய அமைச்சர் குலாம் நபி ஆசாத் நியமிக்கப்பட்டார். ஆனால் சில நேரங்களிலேயே அப்பதவியிலிருந்து ராஜினாமா செய்து மேலிடத்திற்கு அதிர்ச்சி அளித்தார்.

இதனிடையே கடந்த ஏப்ரல் 26 ஆம் தேதி இமாச்சல பிரதேச காங்கிரஸின் வழிகாட்டுதல் குழு தலைவராக நியமிக்கப்பட்ட முன்னாள் மத்திய அமைச்சர் ஆனந்த் சர்மா, அப்பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

இது தொடர்பான கடிதத்தை சோனியாவுக்கு அனுப்பி வைத்துள்ள அவர் கட்சி தொடர்பாக எந்தவித ஆலோசனையும் நடத்தப்படவில்லை, அழைக்கவும் இல்லை.

இதனால் எனது சுயமரியாதை பாதிக்கப்பட்டுள்ளது. அதில் எவ்வித சமரசமும் செய்துக்கொள்ள முடியாது. இதனால் கட்சியில் இருந்து விலகுவதாக கூறியுள்ள அவர், இருப்பினும் சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர்களுக்காக பிரசாரம் செய்வேன் என கூறியுள்ளார்.

காங்கிரஸ் தலைமை மீது அதிருப்தி கொண்டுள்ளவர்கள் 'ஜி23' தலைவர்கள் என அழைக்கப்படுகின்றனர்.அதில் குலாம்நபி ஆசாத் மற்றும் ஆனந்த் சர்மா ஆகியோர் முக்கியமானவர்கள். கடந்த 1982ஆம் ஆண்டு முதன்முறையாக சட்டசபை தேர்தலில் ஆனந்த் சர்மா போட்டியிட்டார். பின்னர் 1984ஆம் ஆண்டு அப்போதைய பிரதமர் இந்திராவால், ராஜ்ய சபாவிற்கு தேர்வு செய்யப்பட்டார். காங்கிரஸில் பல்வேறு பதவிகளையும் ஆனந்த் சர்மா வகித்துள்ளார்.


Source-Dinamalar

Similar News