வாஜ்பாயின் நீண்ட நாளைய விருப்பம் நிறைவேறியது : இனி ‘ரேடியோ காஷ்மீர்’ இல்லை, ஆல் இந்தியா ரேடியோதான் !!

வாஜ்பாயின் நீண்ட நாளைய விருப்பம் நிறைவேறியது : இனி ‘ரேடியோ காஷ்மீர்’ இல்லை, ஆல் இந்தியா ரேடியோதான் !!

Update: 2019-11-01 10:40 GMT

நாடு முழுவதும் அகில இந்திய வானொலியின் (பிரசார் பாரதி) அனைத்து வானொலி நிறுவனங்களும் ‘ஆல் இந்திய ரேடியோ’ என அழைக்கப்பட்டு வந்த நிலையில், காஷ்மீர் மாநில வானொலி மட்டும், ‘ரேடியோ காஷ்மீர்’ என அழைக்கப்பட்டு வந்தது. காஷ்மீருக்கான அரசியல் சிறப்பு சட்டம் 370 வது மற்றும் 35 A அளித்த சிறப்பு சலுகைகளின் பேரில் இந்த வேறுபாடு இருந்தது.


இது முன்னாள் பிரதமர் வாஜ்பாய் அவர்களுக்கு பொறுத்துக் கொள்ள முடியாததாக இருந்தது. சென்ற 1966-ம் ஆண்டு மாநிலங்களவையில் இந்த பிரச்சினையை எழுப்பினார். அப்போது ‘ரேடியோ காஷ்மீர்’ என்கின்ற பெயரை மாற்ற வேண்டும் என குரல் கொடுத்தார். அதற்கு பதிலளித்த அப்போதைய மத்திய அரசு, ‘ஸ்ரீநகர் மற்றும் ஜம்மு வானொலி நிலையங்கள் கடந்த 18 ஆண்டுகளாக ‘ரேடியோ காஷ்மீர்’ என்ற பெயரில் அழைக்கப்படுகின்றன. எனினும் அதன் பெயரை மாற்றுவது குறித்து பரிசீலிக்கிறோம்’ என்று தெரிவித்தது.


அதன்பிறகு அவர் தலைமையிலான மத்திய அரசு அமைந்தபிறகும் அந்த பிரச்சினைக்கு தீர்வு காண முடியவில்லை.       


தொடர்ந்து ‘ரேடியோ காஷ்மீர்’ என்ற பெயரிலேயே அழைக்கப்பட்டு வந்தது. தற்போது பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா எடுத்த துணிகரமான நடவடிக்கையின் பேரில் மாநிலம் 2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டு உள்ளது. நேற்றிலிருந்து இந்த புதிய சட்டம் அமலுக்கு வந்தது.


இதை அடுத்து அகில இந்திய பிரச்சார் பாரதி நிறுவனம் ரேடியோ காஷ்மீரின் பெயர் இனி ‘ஆல் இந்திய ரேடியோ’ என்றே அழைக்கப்படும் என தனது டுவிட்டர் தளத்தில் கூறியுள்ளது. மேலும் ஸ்ரீநகர், ஜம்மு, லே வானொலி நிலையங்கள் முறையே ஆல் இந்திய ரேடியோ - ஸ்ரீநகர், ஜம்மு, லே என்று அழைக்கப்படும் எனவும் அந்த செய்தியில் குறிப்பிட்டுள்ளது. இதன் மூலம் வாஜ்பாய் அவர்கள் அன்று மாநிலங்களவையில் கேட்ட கேள்விக்கு 53 ஆண்டுகளுக்குப்பின் உரியபதில் கிடைத்து உள்ளது.


Similar News