'தமிழகத்தில் இந்து மதத்துக்கு எதிரான காரியங்கள்' - மதுரை ஆதீனம் கூறிய பின்னணி என்ன?

'இந்து மதத்துக்கு எதிரான காரியங்கள் நடந்து வருகிறது' என மதுரை ஆதீனம் பேசியுள்ளார்.

Update: 2022-06-04 13:15 GMT

'இந்து மதத்துக்கு எதிரான காரியங்கள் நடந்து வருகிறது' என மதுரை ஆதீனம் பேசியுள்ளார்.

விஸ்வ ஹிந்து பரிஷத்தின் ஒரு பிரிவான 'அறவழி காட்டும் ஆன்றோர் பேரவை' சார்பில் மதுரையில் இரண்டு நாள் துறவியர் மாநாடு இன்று தொடங்கியது. அந்த மாநாட்டிற்கு வி.ஹெச்.பி அகில உலக இணைச்செயலாளர் தாணுமாலயன் தலைமை தாங்கினார், அதில் மதுரை ஆதீனம் ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் கலந்துகொண்டார்.

அப்போது பேசிய அவர் கூறியதாவது, 'இந்துக் கோவில்கள் தனித்து சுதந்திரமாக இயங்கும் ஒரு வாரியத்திடம் ஒப்படைக்க வேண்டும் என வலியுறுத்தும் போராட்டம் நடத்தினோம் இந்த போராட்டத்தில் ஏராளமான மடத்தைச் சேர்ந்த துறவிகள் கலந்து கொண்டுள்ளனர்.

தமிழகத்தில் கோவில் மற்றும் மடங்களுக்கு சொந்தமான சொத்துக்களுக்கு குத்தகை வாடகை பணம் முறையாக வந்து சேர்வதில்லை, இதை முறையாக கேட்டு வசூலித்தால் அதைப்பற்றி பேசினால் கேட்டால் இடையூறு செய்கிறீர்களா? என்கின்றனர் இந்து மதத்திற்கு எதிரான காரியங்கள் நடந்து வருகிறது. ஆதினங்கள் என்றால் அனுமதிக்க இருக்க முடியாது, ஜால்ரா அடிக்க முடியாது இப்படி பேசினால் தான் பிரதமரிடம் நேரில் சந்தித்து பேச வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.

கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள் விபூதி வைக்க மறுக்கிறார்கள் இந்துக்கள் அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும்' என மதுரை ஆதீனம் பேசினார்

அவரைத் தொடர்ந்து பேசிய பேரூர் ஆதீனம் 'தமிழகத்தில் மதமாற்றத்தை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்' எனவும் வலியுறுத்தினார்.


Source - Asinetnews Tamil

Similar News