நகை கடை கொள்ளை சம்பவம் சமூகவலைத்தளங்களில் ட்ரெண்டான திருவாரூர்! மாட்டிகொண்டு பெயரை கெடுத்திட்டீங்களே.!

நகை கடை கொள்ளை சம்பவம் சமூகவலைத்தளங்களில் ட்ரெண்டான திருவாரூர்! மாட்டிகொண்டு பெயரை கெடுத்திட்டீங்களே.!

Update: 2019-10-05 08:22 GMT

சில நாட்களுக்கு முன் திருச்சியில் உள்ள லலிதா நகை கடையில் சுமார் 13 கோடி மதிப்புள்ள தங்க நகை மற்றும் வைர நகைகள் கொள்ளை அடிக்கப்பட்டது. இந்த கொள்ளை சம்பவம் திருச்சி மாநகரை உலுக்கியது.


கொள்ளை அடிக்கபட்ட சிசிடிவி காட்சிகள் வெளியிடப்பட்டது. அதில் இறந்தபிஉ கொள்ளையர்கள் கொள்ளை அடிப்பதும் சிக்னல் கொடுப்பதற்கு ஒரு கொள்ளையன் வெளியில் இருந்தது கயிற்றை பிடித்திருப்பதுமான காட்சிகள் பதிவாகி இருந்தன. இதனை தொடர்ந்து கொள்ளையர்களை பிடிக்க போலீசார் தனிப்படை அமைத்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். திருச்சியை சுற்றியுள்ள பகுதிகளில் வாகன சோதனை மேற்கொண்டு திருச்சியை அலசி வந்தனர்.


இதே போல் திருவாரூரிலும் வாகன சோதனை மேற்கொண்டனர் ! இச்சோதனையின் போது இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் போலீசாரை கண்டதும் அச்சம் அடைந்தனர். பைக்கின் பின்புறம் இருந்த நபர் திடீரென வாகனத்தை விட்டு இறங்கி ஓட்டம் பிடித்து தப்பித்தான். இதை கண்ட காவல்துறை பைக்கில் வந்தவனை பிடித்து விசாரித்ததில் லாலிதா நகை கடை கொள்ளையில் ஈடுபட்டிருப்பது தெரிய வந்தது.






அவன் பெயர் மணிகண்டன் என்பதும் அவன் திருச்சியை சேர்ந்தவன் என்பதும் தெரியவந்தது . அவனிடமிருந்து தங்க நகைகள் கைப்பற்றப்பட்டன. மேலும் கொள்ளை கும்பல் தலைவனை போலீசார் தேடி வருகின்றனர்.









கொள்ளை அடித்தவன் திருவாரூரில் பிடிபட்டதால் தீடிரென்று திருவாரூர் சமூகவலைத்தளங்களில் தீயாக பரவி ட்ரெண்ட் ஆனது.








https://twitter.com/jairamguttuvan/status/1180003777039884289




https://twitter.com/SuryahSG/status/1179918124323201031




https://twitter.com/R_tweeetz/status/1180069051185295360




https://twitter.com/stalinsk50/status/1179808913845190661

Similar News