'இது ஒன்றும் சிறிய சாதனை அல்ல' - பிரக்யானந்தாவை புகழ்ந்த பிரதமர் மோடி

உலக கோப்பை செஸ் போட்டியில் இரண்டாவது இடம் பிடித்த பிரக்ஞானந்தாவுக்கு ஜனாதிபதி மற்றும் பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

Update: 2023-08-26 11:45 GMT

உலக கோப்பை செஸ் போட்டியில் இரண்டாவது இடம் பிடித்து வெள்ளி பதக்கம் வென்ற தமிழக வீரர் பிரக்யானந்தாவுக்கு ஜனாதிபதி திரௌபதி முர்மு, பிரதமர் மோடி முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் முன்னாள் ஒலிம்பிக் சாம்பியன் பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.


பிரதமர் மோடி தனது டுவிட்டர் பதிவில் 'உலககோப்பை செஸ் போட்டியில் பிரக்ஞானந்தாவின் சிறப்பான செயல்பாட்டிற்காக நாம் பெருமை அடைகிறோம். அவர் தனது அசாதாரண திறமைகளை வெளிப்படுத்தி இறுதி போட்டியில் வலுவான கார்ல்செனுக்கு கடுமையான போட்டியை அளித்தார். இது ஒன்றும் சிறிய சாதனை அல்ல வரவிருக்கும் போட்டிகள் அவருக்கு சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்' என்று குறிப்பிட்டுள்ளார்.


SOURCE :DAILY THANTHI

Similar News