சமூக வலைதளத்தில் தனக்கென்று ராஜ்ஜியம் செய்யும் 'த்ரெட்ஸ்'- டுவிட்டருக்கு போட்டியா?
தகவல் தொழில்நுட்பத்தின் வேகமான வளர்ச்சியில் புதிதாக சமீபத்தில் அடி எடுத்து வைத்திருக்கும் 'த்ரெட்ஸ்' செயலியின் சிறப்புகள் பற்றி காண்போம்.
தகவல் தொழில்நுட்பத்தின் வேகமான வளர்ச்சிகள் பூத்த மலர்கள் தான் சமூக வலைதளங்கள் ஆரம்பத்தில் பேஸ்புக் மட்டுமே இருந்த நிலையில் வாட்ஸ்-அப், டுவிட்டர், இன்ஸ்டாகிராம் என்று வரிசை கட்டி நிற்கின்றன. அரசியல் தலைவர்கள் உட்பட அனைவருமே தங்கள் கருத்துக்களை சமூக வலைதளங்களிலேயே பதிவு செய்கிறார்கள். பதிவு செய்த ஒரு சில நிமிடங்களிலேயே லட்சக்கணக்கானவரிடம் அந்த தகவல் சென்றடைந்து விடுகிறது. இதில் டுவிட்டர் நிறுவனம் மிகவும் பிரபலமாக இருக்கிறது.
இந்த நிலையில் டுவிட்டருக்கு போட்டி என்றால் அது ஃபேஸ்புக், வாட்ஸ்-அப், இன்ஸ்டாகிராம்தான் தான் இந்த நிறுவனங்களின் உரிமையாளர் ஜுக்கர்பெர்க். இவரும் எலான் மஸ்க்கும் நீண்ட காலமாகவே தொழில் போட்டியாளர்கள். மார்க் ஜூக்கர் பெர்க் சமீபத்தில் தனது பேஸ்புக் வலைதளத்தின் தாய் நிறுவனமான 'மெட்டா' நிறுவனத்தின் மூலம் திரெட்ஸ் என்ற சமூக வலைதள செய்தியை அறிமுகப்படுத்தினார். தொடங்கிய உடனே 3 கோடிக்கும் மேற்பட்டோர் தங்களை இணைத்துக் கொண்டனர்.
தமிழ்நாட்டில் கனிமொழி எம்.பி தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை ஆகியோர் முதல் வரிசையிலேயே தங்களை இணைத்துக் கொண்டனர். இந்த 'திரெட்ஸ்' செயலியில் டுவிட்டரை விட அதிகமான எழுத்துக்களை அதாவது 500 எழுத்துக்களை பதிவிட முடியும். இது மட்டுமல்லாமல் படங்கள், ஐந்து நிமிடங்கள் ஓடும் வீடியோக்களையும் பதிவிட முடியும்.டுவிட்டரைப் போன்றே லைக், கமெண்ட், ரிப்போர்ட், ஷேர் ஆகிய சேவைகளும் 'திரெட்ஸ்' செயலில் இருக்கிறது.
த்ரெட்ஸ் உரிமையாளர் தான் இன்ஸ்டாகிராமின் உரிமையாளர் என்பதால் அந்தக் கணக்கை வைத்துக் கொண்டே இதை புதிதாக தொடங்கி விட முடியும். உலகம் முழுவதிலும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த செயலி 27 நாடுகளைக் கொண்ட ஐரோப்பிய யூனியனில் மட்டும் இன்னும் அறிமுகமாகவில்லை. இந்த 'த்ரெட்ஸ்: செயலி பொது உரையாடல்களுக்கான தளமாக செயல்படும் என்று மெட்டா நிறுவனம் பெருமிதத்துடன் கூறுகிறது.