ஆப்கானிஸ்தானில் இங்கிலாந்தை சேர்ந்த மூன்று பேரை சிறைப்பிடித்த தலீபான்கள்
ஆப்கானிஸ்தானில் இங்கிலாந்தை சேர்ந்த மூன்று பேரை தலீபான்கள் சிறைபிடித்துள்ளனர்.
ஆப்கானிஸ்தானில் கடந்த 2021 -ஆம் ஆண்டு ஆகஸ்ட் முதல் தலீபான்களின் ஆட்சி நடந்து வருகிறது .தலீபான் அரசை உலக நாடுகள் எதுவும் முறைப்படி அங்கீகரிக்காத போதும் சர்வதேச நாடுகளைச் சேர்ந்த தனியார் தொண்டு நிறுவனங்கள் ஆப்கான் மக்களுக்கு உதவி புரிந்து வருகின்றனர். இதற்காக பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தன்னார்வலர்கள் ஆப்கானிஸ்தானின் முகாமிட்டுள்ளனர். இந்த நிலையில் ஆப்கானிஸ்தானில் இங்கிலாந்து சேர்ந்த மூன்று பேரை தலீபாகள் சிறை பிடித்து வைத்துள்ளதாக இங்கிலாந்து ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது .
சட்ட விரோதமாக ஆயுதம் வைத்திருந்த குற்றச்சாட்டில் கெவின் கார்ன்வெல்ஸ் என்பவரையும் மற்றும் அடையாளம் தெரியாத நபரையும் கடந்த ஜனவரி மாதம் முதல் தலீபான்கள் சிறை வைத்திருப்பதாக கூறப்படுகிறது. அதைப்போல் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்திய குற்றச்சாட்டில் 23 வயதான மைல்ஸ்ரூட்லெட்ஜ் என்பவர் கடந்த மாதம் இரண்டாம் தேதி சிறைபிடிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் மூன்று பேரையும் பத்திரமாக மீட்பதற்கான நடவடிக்கைகளை இங்கிலாந்து அரசு எடுத்து வருவதாக தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.