60 ஆண்டுகளுக்கு முன்பு சௌந்தரராஜ பெருமாள் கோவிலில் திருடப்பட்ட மூன்று சிலைகள் அமெரிக்காவில் கண்டுபிடிப்பு

கும்பகோணம் அருகே 60 ஆண்டுகளுக்கு முன்பு சௌந்தரராஜ பெருமாள் கோவிலில் திருடப்பட்ட 3 சிலைகள் அமெரிக்காவில் அருங்காட்சியகத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது

Update: 2022-09-09 05:30 GMT

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ளது சுந்தர பெருமாள் கோவில். இந்த ஊரில் பிரசித்தி பெற்ற சௌந்தரராஜ பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவிலின் செயல் அலுவலர் ராஜா சென்னை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசில் கடந்த 2020 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் இரண்டாம் தேதி ஒரு புகார் அளித்தார் .அதில் சௌந்தரராஜ பெருமாள் கோவிலில் உள்ள திருமங்கை ஆழ்வார் சிலையை மர்ம நபர்கள் திருடிச்  சென்று விட்டு அதற்கு பதிலாக போலியாக ஒரு சிலையை வாங்கி வைத்துள்ளனர் .


1957 முதல் 1967 வரையிலான காலகட்டத்தில் அந்த சிலை திருடப்பட்டிருக்கலாம் எனவே கோவிலில் திருடப்பட்ட பழங்கால  சிலையை விசாரணை செய்து மீட்டு இப்பொழுது வழிபாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என கூறியிருந்தார் .அதன் பெயரில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து துணை போலி சூப்பிரண்டு சந்திரசேகரன் தலைமையில் விசாரணை நடத்தினர் தீவிர விசாரணையில் கோவிலில் இருந்த சிலையை திருடிவிட்டு அதற்கு பதிலாக போலியான சிலை கோவிலில் வைக்கப்பட்டது தெரியவந்தது .திருடு போன திருமங்கையாழ்வார் சிலை லண்டன் அருங்காட்சியகத்தில் இருந்தது தெரிய வந்தது. இதை எடுத்து அந்த சிலையை மிக்க போலீசார் நடவடிக்கை மேற்கொண்டனர் இது உண்மைதானா என அறிவதற்காக லண்டன் கிழக்கு கலைத்துறையின் கண்காணிப்பாளர் லாண்ட்ரஸ் கும்பகோணத்திற்கு வந்து விசாரணை நடத்தினார்.


இதையடுத்து கோவிலில் உள்ள மற்ற சிலைகள் மீதும் போலீசருக்கு சந்தேகம் ஏற்பட்டது. எனவே கோவிலில் உள்ள சிலைகள்  உண்மையானதா? அவற்றை திருடிவிட்டு போலியாக  வைத்துள்ளனரா?என்று விசாரணை நடத்த முடிவு செய்தனர் .அதன்படி கோவிலில் உள்ள அனைத்து சிலைகளையும் அதன் பழைய புகைப்படங்களை கொண்டு ஆய்வு செய்தனர். அப்போது கோவிலில் இருந்த காளிங்க நர்த்தன கிருஷ்ணர் ,விஷ்ணு, ஸ்ரீதேவி, ஆகிய மூன்று பழங்கால வெண்கல சிலைகள் திருடப்பட்டு அவற்றுக்கு பதிலாக போலியான சிலைகள் வைக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது. இந்த மூன்று சிலைகளும் 60 ஆண்டுகளுக்கு முன்பு திருட்டு போயிருக்கலாம் என தெரியவந்தது. அமெரிக்க அருங்காட்சியகத்தில் இந்த மூன்று சிலைகளும் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதை எடுத்து மூன்று சிலைகளையும் மீட்டுக் கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் ஈடுபட்டு வருகிறார்கள். மேலும் சிலைகளை திருடிவிட்டு போலி சிலைகளை வைத்தவர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.





 


Similar News